கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தந்தை யோகராஜ் சிங், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து தொடர்ந்து அடிக்கடி தவறான கருத்துக்களை வைப்பது உண்டு . இரு நாட்களுக்கு முன்பு தோனி தனது மகன் யுவராஜின் கிரிக்கெட் வாழ்க்கையை கெடுத்து விட்டதாக யோகராஜ் கூறியிருந்தார்.
முன்பு ஒரு முறை, தோனி காசு இல்லாமல் தான் திரிவார் என்றும் யோகராஜ் பேசியுள்ளார். அதே போல, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் குறித்தும் தவறான கருத்துக்களை யோகராஜ் அடிக்கடி பேசுவது உண்டு.
தொடர்ந்து தோனி மற்றும் கபில்தேவ் குறித்து யுவராஜ் சிங் தந்தை தரம் தாழ்த்தி விமர்சித்து வரும் நிலையில் , அதனை ஏன் யுவராஜ் சிங் தடுக்கவில்லை அல்லது மறுப்பு கருத்து வெளியிடவில்லை என்கிற கேள்வி எழுந்துள்ளது. யுவராஜ் சிங் அமைதியாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
“யுவராஜின் தந்தை யோகராஜ் அதிக கோபக்காரர் பேட்டிங்கில் நல்ல ரன் அடிக்கவில்லை என்றால் யோகராஜ் மகனை வீட்டுக்குள் சேர்க்க மாட்டாராம். சதம் அடித்தால் ஏன் இரட்டை சதம் அடிக்கவில்லை என்று கேட்கும் குணம் கொண்டவர்.
யுவராஜின் தாயும் தந்தையும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வார்கள். சண்டை முற்றி பிரிந்தும் விட்டனர். இதனால், எனக்கு வீட்டில் நிம்மதி இல்லை. தாயுடன் சில காலம் கழித்தேன் என்று தனது சுய சரிதையில் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
மேலும், தற்போது தந்தை யோகராஜூடன் யுவராஜ் பேசிக் கொள்வதில்லை என்பதால், தந்தை கூறும் கருத்துக்கு யுவராஜ் பதில் அளிப்பதில்லை” என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
நடிகை ரீமா கல்லிங்கல் நடத்தும் பார்ட்டி… எத்தனை இளம் பெண்கள்… பாடகி சுசித்ரா வீசும் குண்டு!