கடந்த 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டம். இலங்கையுடன் ஆஸ்திரேலியா மோதியது. 241 ரன்கள் இலக்கு. ஆனாலும், இலங்கையின் அதிரடி ஆட்டக்காரர்கள் ஜெயசூர்யா, கலுவிதரன அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். அடுத்து களம் இறங்கிய துணை கேப்டன் அரவிந்த டி சில்வா குருசிங்கேவுடன் சேர்ந்து மிக அலாதியாக விளையாடி இன்னிங்ஸை கட்டமைத்தார். why singles run important
அதாவது, பந்தை தட்டி தட்டி சிங்கிள்ஸ் எடுத்து கொண்டே இருந்தார். தேவையான பந்துகளை மட்டுமே எல்லைக்கோட்டுக்கு வெளியே விரட்டினார். இதனால், ஸ்கோர்போர்டு உயிர்ப்புடன் இருந்தது. சத்தமில்லாமல் இலங்கையின் ஸ்கோரும் உயர்ந்தது. இறுதியில் இலங்கை அணி அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் அவுட் ஆகாமல், டி சில்வா 107 ரன்கள் அடித்திருந்தார்.
ஒருநாள் போட்டிகளில் இக்கட்டான சூழலில் பந்தை துணிந்து பவுண்டரிக்கு விரட்ட முடியாத பட்சத்தில் ஒரு இன்னிங்சை எப்படிக் கட்டமைக்க வேண்டும் என்பதற்கு அரவிந்த டி சில்வாவின் அந்த உலகக் கோப்பை ஆட்டம் முன்னுதாரணம். பவுண்டரிகள் அடிக்க முடியாத போது, 1,2 என்று குருவி போல ரன்களை சேர்க்க வேண்டும். இதைத்தான் அந்த ஆட்டத்தில் டி சில்வா செய்தார், வென்றார். why singles run important
இந்திய அணியிலும் நேற்று விராட் கோலி இதே பாணியைத்தான் கடைபிடித்தார். 43 ரன்களில் ஓபனர்கள் வெளியேறினாலும் ஆஸ்திரேலியா பக்கம் இன்னிங்ஸ் சாய்ந்து விடாமல் ஸ்ரேயாஸ் ஐயருடன் சேர்ந்து இன்னிங்ஸை அபாரமாக கட்டமைத்தது அற்புதமான விஷயமே.
50 ஓவர்கள் பீல்டிங் செய்து விட்டு, அடுத்து 40 ஓவர்கள் பேட்டிங் செய்வதற்கு எல்லாம் அவரின் உடல் பிட்னெஸ் ஒரு காரணம். எனினும், பவுண்டரிகளை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல் சிங்கிள்ஸ் நேற்று நிறையவே எடுத்தார். விராட் கோலி எடுத்த 84 ரன்களில் 56 ரன்கள் சிங்கிள்ஸ், 4 டபுள்ஸ் ரன்கள் ஆகும். ஆக, 64 ரன்கள் சிங்கிள்ஸ் மற்றும் டபுள்ஸ் என ஓடி ஓடி எடுத்தவை.
கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி வரை கணக்கிட்டால், ஒருநாள் போட்டிகளில் 5870 சிங்கிள்ஸ்களை விராட் கோலி எடுத்துள்ளார். உலகிலேயே சிங்கிள்ஸ் அதிகமாக எடுத்த வீரர் இவர்தான். இது கோலியின் மொத்த ஒரு நாள் போட்டி ரன்களில் 41 சதவிகிதம் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. தற்போது , ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 14,180 எடுத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்காரா 5,503 சிங்கிள்ஸ் எடுத்துள்ளார். why singles run important
இது குறித்து விராட் கோலி கூறுகையில், ‘சிங்கிள்ஸ் ஓடி எடுப்பதை நான் ரொம்பவே விரும்புகிறேன். சிங்கிள்ஸ் ஸ்கோர்போர்டை உயிருடன் வைக்கும். ஆட்டம் நம் கையில் இருப்பதை உணர வைக்கும் ‘ என்கிறார்.