2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டம் வரும் மார்ச் 31 ஆம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த வருடம் ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,
பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் களமிறங்க உள்ளன.
அதேநேரம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது முதல் கோப்பையை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற லட்சியத்துடன் மீண்டும் களமிறங்க உள்ளது.
இந்நிலையில், கிரிக்கெட்டில் வெற்றி பெற 11 வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் என்ற நிலையில்,
பெங்களூரு அணியில் விராட் கோலி, ஏபி டீ வில்லியர்ஸ் மற்றும் தமக்கு தான் அதிக கவனம் கொடுக்கப்பட்டதாக கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.
அதனால் இதர வீரர்கள் தாங்கள் பெங்களூரு அணிக்கு விளையாடுகிறோம் என்ற உணர்வைப் பெறாமலேயே இருந்ததாக தெரிவிக்கும் அவர் அது தான் அந்த அணி இதுவரை கோப்பை வெல்ல முடியாமல் இருப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என கூறியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசிய அவர் : “சில நேரங்களில் முதன்மை வீரர்களில் ஒருவராகவும் அணியின் முதன்மையானவராகவும் இருப்பதால் நான் எனக்கான இடத்தில் கச்சிதமாக இருந்தேன்.
இருப்பினும் பெங்களூரு அணியில் நிறைய வீரர்கள் தங்களை கண்டுகொள்ளாமல் விட்டதாக உணர்ந்ததை நான் புரிந்து கொண்டேன்.
அதாவது நிறைய வீரர்கள் நாம் பெங்களூரு அணிக்காக விளையாடுகிறோம் என்ற உணர்வு இல்லாமலேயே விளையாடினார்கள்.
அத்துடன் அந்த அணியில் எனக்கும், ஏபி டீ வில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி ஆகிய 3 பேருக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக இதர வீரர்கள் நினைத்தனர். அதனால் நிறைய வீரர்கள் மனதளவில் பெங்களூரு அணியுடன் இணைந்து விளையாடாமல் இருந்தனர்.
எனவே அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த வீரர்கள் விளையாடும் போது கோப்பை வெல்வது மிகவும் சவாலாகும்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை கேட்டு ஓபிஎஸ் மனு!
ஏப்ரல் 21 வரை சட்டப்பேரவை நடைபெறும்: சபாநாயகர்!