கேப்டன் தோனியை இடித்த வீரரை சென்னை அணி வாங்கியது ஏன்? இந்த கேள்வி தான் கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. chennai kings mustafizur rahman
நடந்து முடிந்த மினி ஏலத்தில் சென்னை அணி ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், முஷ்டபிகுர் ரஹ்மான், ஷர்துல் தாகூர், சமீர் ரிஸ்வி, அவினாஷ் ராவ் ஆரவல்லி என இளமையும், அனுபவமும் கலந்த வீரர்களை எடுத்துள்ளது.
அதிசயமாக சென்னை அணி முதல்முறையாக ஒரு வங்கதேச பந்துவீச்சாளரை எடுத்துள்ளது. முன்னதாக சென்னை கேப்டன் தோனிக்கும், ரஹ்மானுக்கும் இடையில் 2015-ம் ஆண்டு ஒரு மோதல் சம்பவமும் நடைபெற்று இருந்தது.
இந்தியா – வங்காள தேசம் இடையிலான ஒருநாள் போட்டியின் 25-வது ஓவரை ரஹ்மான் வீசினார். தோனி – ரோஹித் ரன் எடுக்க ஓடும்போது, ரஹ்மான் குறுக்கே நின்று ரன் எடுக்க முடியாமல் தடுத்தார்.
இதைக்கண்ட தோனி தன்னுடைய முழங்கையால் அவரை இடித்துத்தள்ளி விட்டு ரன் எடுத்தார். போட்டி முடிவில் ரஹ்மானுக்கு போட்டித்தொகையில் இருந்து 50% தோனிக்கு 75% அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் இப்போதும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் வீடியோவாக உள்ளது.
ஆனால் அனைத்தையும் மறந்து விட்டு ஐபிஎல் ஏலத்தில், சென்னை அணி ரஹ்மானை எடுத்தது கிரிக்கெட் விமர்சகர்கள் தொடங்கி பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
ஏன் என்றால் பிற அணிகள் போல கேப்டன்கள் பேச்சை கேட்காமல் முடிவு எடுக்கும் அணி சென்னை கிடையாது. சென்னையை பொறுத்தவரை தோனியின் முடிவே அணியின் முடிவாகும்.
அதோடு ரஹ்மான் மார்ச் 22-ம் தேதி தொடங்கி மே 11-ம் தேதி வரை தான் சென்னைக்காக விளையாடுவார். அதற்கு பின் அவர் ஐபிஎல் போட்டிகளில் ஆட மாட்டார்.
இதனால் ஆஸ்திரேலிய அணியின் ஹேசல்வுட் மாற்று வீரராக உள்ளே வருவாரா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இவ்வளவும் தாண்டி சென்னை அணி அவரை எடுக்க காரணம் சென்னை அணியின் பயிற்சியாளர் பிராவோ தான் என கூறப்படுகிறது.
ரஹ்மான் போன்ற பந்துவீச்சாளர்கள் சென்னை அணிக்கு பெரிதும் தேவை என்பதாலும், பதிரனா இடத்திற்கு ஒரு மாற்று வீரர் அவசியம் வேண்டும் என்பதாலும் தான் இந்த முடிவை சென்னை எடுத்துள்ளது.
இந்த செயல் தோனியின் பெருந்தன்மையை காட்டுகிறது என ரசிகர்களும், சென்னை அணி ரஹ்மானை எடுத்ததை வங்காள தேசமும் சேர்ந்து தற்போது கொண்டாடி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–மஞ்சுளா
எண்ணூர் எண்ணெய் கசிவு: நிவாரணம் எவ்வளவு?
மீண்டும் ரூ.47 ஆயிரத்தை எட்டிய தங்கம் விலை!
chennai kings mustafizur rahman