டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (அக்டோபர் 16 ) ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கியது.
இந்த போட்டிகளில் பெரும்பாலும் கோப்பையை வெல்லும் அணியின் வெற்றிக்கு செயல்படும் வீரர்களுக்கு வழங்கப்படும் தொடர் நாயகன் விருது சில சமயங்களில் தோற்றாலும் தனி ஒருவனாக போராடிய வீரர்களுக்கும் கிடைக்கும் .
அந்த வகையில் ஐசிசி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் தொடர் நாயகன் விருதுகளை வென்ற வீரர்களின் பட்டியலை பார்ப்போம்:
ஷாஹித் அஃப்ரிடி
2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றை கடந்து வந்த பாகிஸ்தானின் வெற்றியை மாபெரும் இறுதி போட்டியை கையில் வைத்திருந்தும் கடைசி ஓவரில் போராடிய மிஸ்பா-உல்-ஹக் தேவையற்ற ஷாட் அடித்து கோப்பையை இந்தியாவுக்கு தாரை வார்த்தார்.
இருப்பினும் அந்த தொடரில் 91 ரன்களையும் 12 விக்கெட்டுகளையும் எடுத்து ஆல்-ரவுண்டராக அசத்திய ஷாஹித் அஃப்ரிடிக்கு தொடர் நாயகன் விருது கிடைத்தது.
திலகரத்ன தில்சன்
2009 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 2 வது டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி அபாரமாக செயல்பட்டு கோப்பையை வென்று சாதனை படைத்தது.
ஆனால் அத்தொடரில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய இலங்கை இறுதிப் போட்டியில் தோற்ற நிலையில் அதிகபட்சமாக 7 போட்டிகளில் 317 ரன்களை 52.83 என்ற அபாரமான சராசரியிலும் 144.74 என்ற ஸ்டிரைக் ரேட்டிலும் எடுத்த இலங்கை வீரர் திலகரத்ன தில்சனுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
கெவின் பீட்டர்சன்
2010 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற 3 வது உலகக் கோப்பையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டிக்கு வந்த ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இங்கிலாந்து வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு ஐசிசி உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
அந்த தொடரில் 248 ரன்களை 137.00 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் 62.00 என்ற சிறப்பான சராசரியிலும் வெற்றிக்கு பங்காற்றிய கெவின் பீட்டர்சன் கோப்பையுடன் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
ஷேன் வாட்சன்
மிகச் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான இவர் 2012 இல் இலங்கையில் நடைபெற்ற உலகக் கோப்பையில் 6 போட்டிகளில் 249 ரன்களை 150 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் 49.80 என்ற சராசரியிலும் குவித்தார்.
இந்த ஆட்டத்தில் அரை இறுதியில் வெஸ்ட் இண்டீசிடம் தோற்ற ஆஸ்திரேலியா வெளியேறியது. இருப்பினும் ஷேன் வாட்சன் ஆட்டத்திற்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
விராட் கோலி
2014 இல் வங்கதேசத்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இவர் 6 போட்டிகளில் 319 ரன்களை 106.33 என்ற அற்புதமான சராசரியில் குவித்து வரலாற்றில் ஒரு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்தார்.
குறிப்பாக பைனலில் தனி ஒருவனாக 77 ரன்கள் எடுத்தும் இலங்கையிடம் இந்தியா தோற்ற போதிலும் அவரது ஆட்டத்திற்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் யார் தொடர் நாயகன் விருது பெறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆரம்பமே அதிர்ச்சி: இலங்கைக்கு குட்டு வைத்த நமீபியா!
டி20 உலகக் கோப்பை இன்று துவக்கம்: அணிகள், போட்டிகள், பரிசு தொகை முழுவிவரம்!