நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனினும் வெற்றியுடன் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே அதிக வாய்ப்புள்ளதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த 7ஆம் தேதி தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் அஜிங்கியா ரஹானே மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு சுருண்டது.
3ஆம் நாள் முடிவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 44 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்துள்ளது.
கையில் 6 விக்கெட் கைவசமிருக்க, 296 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா தற்போது போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் வெற்றிவாய்ப்பு இந்திய அணிக்கு குறைவாகவே உள்ளது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்புள்ளதாக முன்னாள் இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இன்னும் 2 நாட்கள் உள்ளது. 4வது இன்னிங்ஸ் இலக்காக 360 அல்லது 370 ரன்களை ஆஸ்திரேலியா நிர்ணயிக்கும்.
அப்படி நடந்தால் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது. விராட் கோலி, ரஹானே போன்று உலகின் தலைசிறந்த சேஸர்கள் அணியில் இருப்பதால் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாகசாதகமாகவே முடியும்” என்று சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
சேலத்தில் 3 நாட்கள் முகாமிடும் முதல்வர் ஸ்டாலின்: பயண விபரம்!
’நாயகன் மீண்டும் வரார்’: ரீ ரிலீஸாகும் வேட்டையாடு விளையாடு!
’ஹாய் அபிராமி’: நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து ஆரத்தழுவிய யானைகள்!
Comments are closed.