சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார்? சேவாக் ஓபன் டாக்!

விளையாட்டு

ஐபிஎல் 16வது சீசன் கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த 15 சீசனில் 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே)திகழ்கிறது.

சிஎஸ்கே அணி இதுவரை 2 சீசன்களை தவிர ஆடிய மற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றது.

அந்த அளவிற்கு சென்னை அணி ஆதிக்கம் செலுத்த முக்கிய காரணம் கேப்டன் தோனி தான். எனவே சிஎஸ்கே அணி தொடர்ந்து இதேமாதிரி ஜொலிக்க வேண்டுமானால் அதற்கு சிறப்பான கேப்டன் அவசியம். இந்நிலையில், தோனிக்கு அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி வலுத்துவருகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஜடேஜா அந்த அணியின் நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் கேப்டன்சியில் தொடர்ந்து சொதப்பியதால் ஜடேஜாவை மாற்றி விட்டு மீண்டும் தோனியிடம் கேப்டன்சி பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்த ஐபிஎல் போட்டியிலும் தோனிதான் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருக்கிறார். அடுத்த சில மாதங்களில் 42 வயதை தொடும் தோனிக்கு இது கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் பட்சத்தில் சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அந்தவகையில், ருதுராஜ் கெய்க்வாட் தான் சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் என்று சேவாக் கூறியுள்ளார்.

இது குறித்து Cricbuzz இணையத்தில் பேசிய சேவாக்,”“ருதுராஜ் அரைசதம் மட்டும் அடித்துவிடவில்லை. அதை சதமாக மாற்றும் அளவிற்கு திறமை படைத்தவராக இருக்கிறார்.

இரண்டு சீசன்களாக சிஎஸ்கே அணிக்கு சிறப்பான துவக்க வீரராக இருந்திருக்கிறார். இவருக்கு இந்திய அணியில் நிறைய வாய்ப்புகள் கொடுக்கவில்லையே என்று ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக உடனடியாக தூக்கிவிடலாம் என்றால், இந்தியாவில் இப்போது பல ஜாம்பவான்கள் இருந்திருக்க முடியாது. சரியாக ஆடாத வீரர்களுக்கு நிறைய வாய்ப்புகளை கொடுக்கிறீர்கள். அதையும் சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் மோசமாக விளையாடி வருகிறார்கள்.

ஆனால் ஏன் ருதுராஜ்-க்கு ஒருசில போட்டிகள் தவிர்த்து, நிறைய வாய்ப்புகள் கொடுக்கவில்லை. விரைவில் அவரை இந்திய அணியில் எடுத்து நிறைய வாய்ப்புகள் கொடுத்து பயன்படுத்த வேண்டும். இந்த சீசனில் நிறைய ரன்கள் அடித்து இந்திய அணியில் இடம் பெறுவார் என்று நம்புகிறேன். சிஎஸ்கே அணிக்கு அடுத்த கேப்டனாகவும் இவர் வருவார்” என்று சேவாக் கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பொதுத்தேர்வை முடித்து வந்த மாணவிக்கு அரிவாள் வெட்டு!

200 கார்கள், ஐம்பது தட்டுகள்… புதுக்கோட்டையின் முதல் சீர்: எடப்பாடியை அசத்திய விஜயபாஸ்கர்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *