இப்போ யார கேப்டனா போடுறது?… இந்திய அணிக்கு வந்த இடியாப்ப சிக்கல்!

விளையாட்டு

ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் இருவருமே தற்போது சிகிச்சையில் இருப்பதால் இந்திய அணிக்கு மிகப்பெரும் சிக்கல் உருவாகி உள்ளது.

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவை தொடர்ந்து வருகின்ற 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா விளையாடவுள்ளது.

உலகக்கோப்பை தொடரின் போது ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு காலில் அடிபட்டதால் அவர் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.

இதனால் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளை டி20 தொடரில் எதிர்கொண்டு அதில் வெற்றியும் பெற்றது.

ஆனால் பட்ட காலிலேயே படும் என்பது போல தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியின் போது கேப்டன் சூர்யகுமாருக்கும் காலில் அடிபட்டது.

தற்போது சூர்யகுமார் அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் இருந்து வருகிறார். அவர் முழு உடற்தகுதியை எட்டிட இன்னும் 2 மாதங்கள் ஆகக்கூடும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மறுபுறம் ஹர்திக் பாண்டியாவும் இன்னும் முழு உடற்தகுதியை எட்டவில்லை. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கு புதிய கேப்டனை தேட வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா நீண்ட நாட்களாக டி20 போட்டியில் ஆடாமல் இருக்கிறார். இந்திய தேர்வுக்குழு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி2௦ தொடரில் அவருக்கு கேப்டனாக வாய்ப்பு அளிக்குமா? என்பதை பொறுத்து தான் டி2௦-யில் அவரின் எதிர்காலம் இருக்கிறது.

இந்த தொடரில் அவர்  இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டால், 2024-ம் ஆண்டு ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரிலும் அவரே இந்திய அணியை வழிநடத்தி செல்ல வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

ரவீந்திர ஜடேஜா

அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஜடேஜா இதுவரை இந்திய அணியை வழிநடத்தியது இல்லை. சூர்யகுமார் காயத்தால் வெளியேறிய போது அவருக்கு கேப்டன் வாய்ப்பு கிடைத்தது.

அதை சரியாக கையாண்டு அணியையும் வெற்றி பெறச் செய்தார். எனவே அவருக்கு கேப்டனாக ஒரு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரேயாஸ் ஐயர்

உலகக்கோப்பை தொடருக்கு பின் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் டி20 தொடர்களில் ஆடி வருகிறார். ஐபிஎல் தொடரில் அணிகளை வழிநடத்தி சென்ற அனுபவம் அவருக்கு இருக்கிறது. தற்போது இந்திய அணியின் துணை கேப்டனாகவும் இருக்கிறார்.

எனவே ரோஹித், ஜடேஜா இருவருக்கும் வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை கேப்டனாக வழிநடத்திட வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்தியா – ஆப்கானிஸ்தான் டி2௦ தொடர் ஜனவரி 11 தொடங்கி ஜனவரி 17 வரை இந்தியாவில் நடைபெற இருக்கிறது.

எனவே இன்னும் ஒருசில தினங்களில், இந்த கேப்டன் குழப்பங்களுக்கு பிசிசிஐ முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மஞ்சுளா

பெரியார் நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

எம்ஜிஆர் நினைவு தினம்: எடப்பாடி மரியாதை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *