2023-24 நிதியாண்டில் அதிக வரிப் பணம் செலுத்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை ஃபார்சூன் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கிரிக்கெட்டில் பல்வேறு சாதனை பட்டியல்களில் எப்படி கோலி முதலிடம் பிடித்துள்ளாரோ, அதேபோல இந்தப் பட்டியலில் அந்த ரன் மெஷினே முதலிடம் பிடித்துள்ளார். கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த நிதியாண்டில் ரூ.66 கோடி வாரியாக செலுத்தியுள்ளதாக ஃபார்சூன் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து தலைப்பு செய்திகளில் இடம்பெற்றுவரும் எம்.எஸ்.தோனி இந்த பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ளதாக ஃபார்சூன் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 2023-24ஆம் நிதியாண்டில், தோனி ரூ.38 கோடி வரியாக செலுத்தியுள்ளார்.
இவர்களை அடுத்து, இந்தப் பட்டியலில் ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர் 3வது இடம் பிடித்துள்ளார். அவர் ரூ.28 கோடி வரியாக அரசுக்கு செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்து, ரூ.23 கோடி வரிப்பணம் செலுத்தி, இப்பட்டியலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி 4வது இடத்தையும், ரூ.13 கோடி வரிப்பணம் செலுத்தி ஹர்திக் பாண்டியா 5வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
அதேபோல, ரிஷப் பண்ட் 2023-24ஆம் நிதியாண்டில் ரூ.10 கோடி வரிப்பணமாக செலுத்தியுள்ளார்.
இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டனாக உள்ள ரோகித் சர்மா இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: புதிதாக ஹேர் டை அடிக்கப் போறீங்களா… இந்த விஷயங்களை மறந்துடாதீங்க!
டாப் 10 செய்திகள் : புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி முதல் விஜய் படம் ரிலீஸ் வரை!
ஹெல்த் டிப்ஸ்: சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துமா… வெண்டைக்காய் ஊறவைத்த நீர்?