சத்ரான் செய்த சதி … இங்கிலாந்துக்கு எழுதப்பட்ட விதி!

Published On:

| By Kumaresan M

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் மாபெரும் சாதனை படைத்தது. அந்த போட்டியில் தொடக்க வீரரான 23 வயதே நிரம்பிய இப்ராஹிம் சத்ரான் அபாரமாக விளையாடி 146 பந்துகளில் 177 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் அணி இந்த போட்டியில் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. Who is Ibrahim Zadran?

பவர் பிளேவில் 37 ரன்களுக்கு 3 முக்கிய விக்கட்டுகளை இழந்து தவித்த ஆப்கானிஸ்தான் அணியின் இன்னிங்ஸை இப்ராஹிம் சத்ரான் தனி ஆளாக நின்று கட்டமைத்தார். 65 பந்துகளில் அரை சதம் கடந்த அவர், 106 பந்துகளில் சதம் அடித்தார். Who is Ibrahim Zadran?

4வது விக்கெட்டுக்கு கேப்டன் ஹசமதுல்லா ஷாகிதியுடன் சேர்ந்து 103 ரன்களும், 5வது விக்கெட்டுக்கு அசமதுல்லா ஓமர்சாயுடன் சேர்ந்து 72 ரன்களும் முக்கியமாக 6வது விக்கெட்டுக்கு முகமது நபியுடன் சேர்ந்து 111 ரன்களும் பார்ட்னர்ஷிப்பில் அவர் சேர்த்தார். Who is Ibrahim Zadran?

கடைசி 10 ஓவர்களில் மட்டும் இங்கிலாந்து 113 ரன்களை விட்டு கொடுத்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. சத்ரானின் 177 ரன்களில் 12 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடங்கும். முன்னதாக இலங்கை அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் 162 ரன்கள் அடித்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

விக்கெட்டுகள் இழந்து கொண்டிருந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் விளையாடிய இப்ராஹிம் சத்ரானின் ஆட்டம் பல பிரபல வீரர்களை வியக்க வைத்துள்ளது. சத்ரான் 7 டெஸ்ட் போட்டிகளிலும் 34 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆப்கானிஸ்தானின் மிகச்சிறந்த இளம் வீரராக கருதப்படுபவர். கடந்த 2019 ஆண்டுதான் அந்த அணிக்காக அறிமுகமானார். 2022 ஆம் ஆண்டு ஐ.சி.சி இவரை வளர்ந்து வரும் இளம் வீரராக அறிவித்தது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் இந்த தொடரில் அடித்த 165 ரன்தான் தனிப்பட்ட வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. தற்போது, இந்த தொடரிலேயே அந்த சாதனையை சத்ரான் முறியடித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணிக்காக முதன்முறையாக உலகக் கோப்பையில் சத்ரான் சதம் அடித்ததும் கவனத்தில் கொள்ளத்தக்கது. கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 129 ரன்கள் எடுத்தார். தற்போது, சாம்பியன்ஸ் டிராபியிலும் சதம் அடித்துள்ளார். இதனால், ஆப்கானிஸ்தான் அணிக்காக உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என இரண்டு தொடர்களிலும் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

இந்த தொடரில் ஆப்கானிஸ்தானும் இங்கிலாந்தும் தங்களின் முதல் ஆட்டத்தில் தோற்றிருக்கின்றன. ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா தலா 3 புள்ளிகள் பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான் 2 புள்ளிகளும் இங்கிலாந்து அணி புள்ளிகள் பெறாமலும் உள்ளன.

கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலிய அணியையும் இங்கிலாந்து தென்னாப்ரிக்க அணியையும் எதிர்கொள்கின்றன. இனிமேல், இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு மங்கி விட்டது என்றே கூறலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share