ஐ.பி.எல் தொடரில் அதிக பணம் சம்பாதித்த வீரர்கள் பட்டியலில் மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா ரூ.178.6 கோடி சம்பாதித்து முதலிடத்தில் உள்ளார். 17 சீசன்களில் இவர் இவ்வளவு தொகை சம்பாதித்துள்ளார். ரோகித் இரு ஆண்டுகள் டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் ஐ.பி.எல் தொடரில் ஆடியுள்ளார். டெக்கான் சார்ஜர்ஸ் அணிதான் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியாக உள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு சங்கக்காரா தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி ஐ.பி.எல் தொடரில் சாம்பியன் பட்டத்தை பெற்றது. அந்த அணியில் ரோகித்தும் இடம் பெற்றிருந்தார். இதனால், மும்பை அணியுடன் 5 முறை கேப்டனாகவும் டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் ஒரு முறை வீரராகவும் மொத்தம் 6 முறை ஐ.பி.எல் கோப்பையை வென்றவர் என்ற பெருமையும் ரோகித்துக்கு உண்டு. ஐ.பி.எல் விளையாடும் வேறு எந்த வீரரும் படைக்காத சாதனை இதுவாகும்.
கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் 2008 ஆம் ஆண்டு முதல் 17 சீசன்களில் ரூ.178.6 கோடி சம்பாதித்துள்ளார். இவர், சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்ட காலத்தில் புனே அணிக்காக இரு ஆண்டுகள் விளையாடினார்.
ஆர்.சி.பி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பெங்களுரு அணிக்காக மட்டுமே விளையாடி வந்துள்ளார். இவர் ரூ.173.2 கோடி சம்பாதித்துள்ளார். சென்னை அணியின் முன்னாள் மிடில் ஆர்டர் நாயகன் சுரேஷ் ரெய்னா ரூ.110.74 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். அடுத்ததாக ரவீந்தர ஜடேஜா ரூ.109 கோடி சம்பாதித்துள்ளார். கொல்கத்தா அணியின் சுனில் நரேன் ரூ.107.2 கோடியும், ஆர்.சி.பி அணியின் முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் ரூ.102 கோடியும் வருவாய் ஈட்டியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
“விஜய்யுடன் திருமா கூட்டணி வைக்க மாட்டார்” – சீமான்
ஒரு தேர்தலுக்கு ஆலோசகராக இருந்தால் 100 கோடி…. பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்!