உலகின் முன்னணி குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், மீண்டும் ஜேக் பால் என்ற குத்துச்சண்டை வீரருடன் தொழில்முறை மோதலில் ஈடுபட்டார்.
இந்த போட்டி இன்று (நவம்பர் 16) டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ஆர்லிங்டன் நகரில் 80 ஆயிரம் இருக்கைகள் கொண்ட அரங்கத்தில் நடைபெற்றது. 58 வயதான மைக் டைசன், 27 வயதான ஜேக் பாலுடன் மோதுவதால் இந்த மோதல் கடும் எதிர்பார்ப்பை கிளப்பியது. ஆனால், 8 வது சுற்று முடிவில் மைக் டைசன் தோல்வியடைந்தார்.
இந்த போட்டிக்கான சிறப்பு டிக்கெட் ஒன்றின் விலை மட்டுமே இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்திய மதிப்புப்படி சுமார் 17 கோடி ஆகும்.
இந்த சிறப்பு டிக்கெட்டை வாங்கிய லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த வழக்கறிஞர் கோரோஷ் டார்க்ஜாடே இரண்டு இருக்கை கொண்ட சோபா ஒன்றில் மிகவும் நெருக்கமாக அமர்ந்து போட்டியை கண்டுகளித்தார். போட்டி நடக்கும் மேடைக்கும், இந்த இருக்கைக்கும் 6 அடி மட்டுமே இடைவெளி இருந்தது.
மேலும், மைக் டைசன் மற்றும் ஜேக் பால் ஆகியோரின் அறைக்கு சென்று அவர்களை சந்தித்து போட்டோக்கள் எடுத்துக் கொண்டார். போட்டியாளர்கள் இருவரும் கையெழுத்திட்ட குத்துச் சண்டை கையுறைகளும் இவருக்கு வழங்கப்பட்டது. இந்த ஒரு டிக்கெட் மட்டுமே 17 கோடி மதிப்பு கொண்டது. மற்றவை 55 டாலர்கள் முதல் 5 ஆயிரம் டாலர்கள் வரை டிக்கெட் விற்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
கங்குவா ஹீரோயின் திஷா பதானி தந்தைக்கு நடந்த சோகம்… இத்தனைக்கும் முன்னாள் டி.எஸ்.பியாம்!