2026 டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள 12 அணிகள் எவை?

விளையாட்டு

2024 டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்து ‘சூப்பர் 8’ சுற்று ஆட்டங்கள் சுவாரஸ்யமாக நடைபெற்று வருகின்றன.

இந்த தொடர் 20 அணிகளுடன் தொடங்கிய நிலையில், தற்போது அரையிறுதியில் காலியாக உள்ள 4 இடங்களுக்காக 8 அணிகள் மோதிக்கொள்கின்றன.

இந்நிலையில், 2026-ஆம் ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ள 12 அணிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Image

2026 டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள நிலையில், இந்த 2 அணிகள் நேரடியாக அந்த தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.

அதை தொடர்ந்து, தற்போது நடைபெற்றுவரும் 2024 டி20 உலகக்கோப்பை தொடரில், சூப்பர் 8 சுற்றுக்கு இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள், இந்த 2026 டி20 உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

மேலும், ஐசிசி டி20 தரவரிசை அடிப்படையில் மேலும் 3 அணிகள் இந்த 2026 டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறவுள்ளன.

ஜூன் 30, 2024 அன்றைய நிலவரப்படி, ஏற்கனவே தகுதி பெற்றுள்ள 9 அணிகளை தவிர்த்து, ஐசிசி டி20 தரவரிசையில் மேலே உள்ள 3 அணிகள் நேரடியாக அந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெரும்.

அதன் அடிப்படையில், தற்போது உள்ள நிலவரப்படி, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய 3 அணிகள், அந்த கடைசி 3 இடங்களை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 டி20 உலகக்கோப்பை தொடரை போலவே 2026 டி20 உலகக்கோப்பை தொடரிலும் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், மீதமுள்ள 8 இடங்களுக்கு தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: தினமும் தலைக்குக் குளிப்பவரா நீங்கள்?

டாப் 10 நியூஸ் : கள்ளக்குறிச்சி வழக்கு விசாரணை முதல் காங்கிரஸ் போராட்டம் வரை!

கிச்சன் கீர்த்தனா : ஓட்ஸ் கொய்யாப்பழ டிலைட்

இது என்னடா மாஸ்டருக்கு வந்த சோதனை: அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *