வரும் 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. ஆனால், இந்திய அணி 2008 ஆம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதில்லை.
இதனால், பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் வேறு நாட்டில் நடத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதற்கிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியா ஆடும் போட்டிகள் அனைத்தும் லாகூரில் நடத்தப்படும் . போட்டி முடிந்தவுடன் இந்திய வீரர்கள் தனி விமானத்தில் பாகிஸ்தான் எல்லைக்கருகிலுள்ள அம்ரிஸ்டர் நகருக்கு சென்று தங்கிக் கொள்ளலாம்.
இந்திய அணி ஆடும் ஒவ்வொரு போட்டிக்கும் பாகிஸ்தானுக்கு வந்து ஆடிவிட்டு அன்றைய தினமே இந்தியாவுக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்து தருவதாகவும் கூறி இருந்தது. ஆனாலும், இந்தியா தரப்பில் எந்த இசைவும் தெரிவிக்கப்படவில்லை.
எட்டு அணிகள் பங்கேற்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி துவங்கி மார்ச் 9 அன்று முடிவடையும் வகையில் உத்தேச அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. கராச்சி, லாகூர் , ராவல் பிண்டி நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் லாகூரில் நடைபெறும் வகையில் அட்டவணை வெளியிடப்பட திட்டமிட்டுள்ளது.
ஆனால், அப்படியும் இந்திய அணியை பங்கேற்க மத்திய அரசு அனுமதிக்கவில்லை என்றால், இந்தியா ஆடும் போட்டிகள் துபாய் அல்லது சார்ஜாவில் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
இறுதிப் போட்டி மார்ச் 9-ஆம் தேதி லாகூரில் நடைபெறுகிறது. ஒருவேளை இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் இறுதிப் போட்டியும் வேறு நகரத்துக்கு மாற்றப்படலாம். ஆனால், இதுவரை உறுதியான முடிவு இல்லாததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குழம்பி போய் கிடக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்