அவரும் டென்ஷன் பார்ட்டிதான்- தோனி ரகசியம் பகிர்ந்த பத்ரிநாத்!

Published On:

| By Kumaresan M

பொதுவாக தோனி என்றாலே கூலாக விஷயங்களை  ஹேண்டில் செய்வார் என்றே அனைவரும் கருதுவோம். ஆனால், அவரும் டென்ஷன் பார்ட்டி என்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் .

இன்சைடு ஸ்போர்ட்ஸில் தோனி குறித்து  பத்ரிநாத் கூறியதாவது,  ராயல்சேலஞ்சர்ஸ் அணிக்கு  எதிராக நடந்த ஒரு போட்டியில் 110 ரன்கள் இலக்கை நாங்கள் சேஸ் செய்தோம். அடுத்தடுத்து  விக்கெட்டுகளை இழந்து அந்தப் போட்டியில் நாங்கள் தோற்றோம்.

அனில் கும்ப்ளே பந்தில்  நான் ஆட தெரியாமல்  எல்.பி.டபிள்யூ அவுட் ஆனேன். பின்னர், நான் டிரெஸ்சிங் அறையில் இருந்தேன். உள்ளே வந்த தோனி, அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை உதைத்ததில் தெறித்து போய் விழுந்தது. இந்த சமயத்தில் எங்களால் அவரின் கண்ணை பார்க்க முடியவில்லை.

பல நேரங்களில்  அவர் இப்படி நிதானத்தை இழந்துள்ளார். ஒரு முறை வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமான், வேண்டுமென்றே தோனி மீது இடித்தார். இதில், அவரின் கை வீங்கி விட்டது. அப்போது, அவர் மீது தோனி பாய்ந்தது உண்டு. மற்றொரு முறை  மணீஷ் பாண்டே ஓடுவதற்கு தயாராக இல்லாமல் இருந்த போது, தோனி அவரை கடிந்து கொண்டது உண்மைதான்.

ஒரு போட்டியில் மைக் ஹஸ்சியை தோனி ஸ்டம்ப்பிங் செய்தார். அப்போது, நடுவர் அவுட் கொடுக்கவில்லை. தோனி உடனே, நடுவரிடத்தில் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இப்படி, பல தருணங்களில் கோபப்பட்டாலும் வெளியே தெரியக் கூடாது என்று நினைப்பார். அப்படி, வெளியே தெரிந்தால் எதிரணியினருக்கு அட்வான்டேஜ் ஆகி விடும் என்றும் தோனி கருதுவார் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

சத்தமே இல்லாமல் நல்ல காரியம் : ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் தங்க மனசு

தொடர்ந்து வெப்பம் நீடிக்கும்: வானிலை மையம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share