இந்தியா vs நியூசிலாந்து போட்டி: மழை பாதித்தால் என்ன நடக்கும்?

விளையாட்டு

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 அன்று துவங்கிய 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகள் நிறைவு பெற்றுள்ளது. இதை தொடர்ந்து, புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்துள்ள இந்தியா, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இவர்களில், முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ள உள்ளன. இந்த போட்டி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் வரும் நவம்பர் 15 அன்று நடைபெறவுள்ளது.

அதேபோல, 2வது அரையிறுதி போட்டியில், புள்ளிப்பட்டியலில் 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்த போட்டி, நவம்பர் 16 அன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதை தொடர்ந்து, இந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள் இடையே, வரும் நவம்பர் 19 அன்று அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்த போட்டிகள் மழையால் பாதித்தால் என்ன நடக்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த போட்டிகளுக்கு ‘ரிசர்வ் டே’ உள்ளது என ஐசிசி அறிவித்துள்ளது. இதன்மூலம், ஒருவேளை இந்த 2 அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி மழையால் பாதித்தால், போட்டி திட்டமிடப்பட்ட நாளுக்கு அடுத்த நாளில், ஆட்டம் தொடரப்படும்.

அதன்படி, இந்தியா vs நியூசிலாந்து இடையேயான அரையிறுதிப் போட்டி மழையால் பாதித்தால், அந்த ஆட்டம் நவம்பர் 16 அன்று தொடரப்படும்.

அதேபோல, தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா இடையேயான 2வது அரையிறுதியில் மழை குறுக்கிட்டால், நவம்பர் 17 அன்று அந்த ஆட்டம் தொடரப்படும்.

ஒருவேளை, இந்த ரிசர்வ் டே-விலும் மழை குறுக்கிட்டு, போட்டியை நிறைவு செய்ய முடியாமல் போனால், புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் உள்ள அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

முரளி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ரவுடி கருக்கா வினோத் மீது என்ஐஏ வழக்குப்பதிவு!

கனமழையால் விடுமுறை அறிவிப்பு… கல்லூரி தேர்வுகள் நடைபெறுமா?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *