IPL 2024: பிளே-ஆஃப் ஆட்டங்கள் மழையால் ரத்தானால் என்ன நடக்கும்?

விளையாட்டு

2024 ஐபிஎல் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்த அணிகளில் முதல் 2 இடங்களை பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள், குவாலிஃபையர் ஆட்டத்தில் நாளை (மே 21) விளையாடவுள்ளன.

அதேபோல, 3வது மற்றும் 4வது இடங்களை பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மே 22 அன்று எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடவுள்ளன. இந்த 2 ஆட்டங்கள் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

இதை தொடர்ந்து, முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் தோல்வியடைந்த அணியும் எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணியும், மே 24 அன்று 2வது குவாலிஃபையர் ஆட்டத்தில் மோதும்.

பின் 2 குவாலிஃபையர் ஆட்டங்களில் வெற்றி பெரும் அணிகள் மே 26 அன்று இறுதிப்போட்டியில் மோதும். இந்த 2 போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

இந்த போட்டிகளில் மழை பெய்தால் என்ன நடக்கும்?

ஒருவேளை இந்த போட்டிகளில் மழை குறுக்கிட்டால், போட்டியை முறையாக நடத்தி முடிக்க நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இருந்து 2 மணி நேரம் கூடுதல் அவகாசம் வழங்கப்படும்.

பின் ஓவர்களை குறைத்து ஆட்டத்தை நடத்தி முடிக்க முயற்சிக்கப்படும். போட்டி நாளில் ஒருவேளை இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் வாய்ப்பு இல்லை என்றால், ஆட்டம் அடுத்த நாளான ‘ரிசர்வ் டே’-வுக்கு மாற்றப்படும்.

ரிசர்வ் டேவிலும் ஆட்டத்தை நடத்த முடியாமல் போனால், சூப்பர் ஓவர் மூலம் போட்டியின் வெற்றி தீர்மானிக்கப்படும்.

ஒருவேளை, அன்றைய தினத்திலும் சூப்பர் ஓவர் கூட விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால், புள்ளிப் பட்டியலில் மேலே உள்ள அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

அதன்படி, முதல் குவாலிஃபையர் ஆட்டம் மழையால் பாதித்தால், கொல்கத்தா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். எலிமினேட்டர் ஆட்டம் மழையால் பாதித்தால், ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். 2-வது குவாலிஃபையர் மற்றும் இறுதிப் போட்டிக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும்.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் “கொட்டுக்காளி” – மாஸ் காட்டும் சூரி

5 மாதத்தில் 1000 கோடி… மலைக்க வைத்த மல்லுவுட்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *