தோனியிடம் கற்றுக்கொண்டது என்ன? ஆர்சிபி கேப்டன் பாப் டூபிளசிஸ்

விளையாட்டு

மார்ச் 31 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் மிக பிரமாண்டமாக தொடங்குகிறது.

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை முடித்தவுடன் வீரர்கள் அனைவரும் அவரவர் விளையாடும் ஐபிஎல் அணிகளுடன் இணைந்துவிடுவார்கள்.

இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்கள் அணியில் இடம்பெற்றிருக்கும் அனைத்து வீரர்களுடன் பாட்காஸ்ட் எடுத்து வருகிறது. அதில் அந்த அணியின் தற்போதைய கேப்டன் பாப் டூபிளசிஸ் பேசியிருக்கிறார்.

அதில், தோனி, ஸ்டீபன் பிளெமிங் மற்றும் கிரீம் ஸ்மித் ஆகியோரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டதாகவும், அதேநேரம் அவர்களைப் போல் என்னுடைய கேப்டன்ஷிப் அணுகுமுறை இருக்காது என தெரிவித்துள்ளார்.

அந்த பாட்காஸ்டில் டூபிளசிஸ் பேசும்போது, “கிரீம் ஸ்மித் தென்னாப்பிரிக்க அணிக்கு கேப்டனாக இருந்த போது அனைத்து வீரர்களையும் தன்னுடைய பேச்சால் கட்டுக்குள் வைத்திருந்தார்.

What did you learn from Dhoni RCB captain

அவருக்குப் பிறகு ஸ்டீபன் பிளெம்மிங் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஆகியோரை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

தோனி தலைமையின் கீழ் பல போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினேன். அவருடைய கேப்டன்ஷிப் திறமையை ஒருவர் தெரிந்து கொள்வது என்பது கடினம்.

இக்கட்டான சூழலில் தோனி எடுக்கும் முடிவு மற்றும் வித்தியாசமான அணுகுமுறையைக் கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். தோனி ஒரு போட்டியை பார்க்கும் விதமும், நாம் போட்டியை பார்க்கும் விதமும் வித்தியாசமாக இருக்கும். அதேநேரத்தில் அவர்களுடைய பாணியை நான் ஒருபோதும் பின்பற்ற மாட்டேன். நான் நானாக இருக்க விரும்புகிறேன்.

அப்படி இருந்தால் மட்டுமே கடினமான நேரங்களில் நம்முடைய திறமை வெளிப்படும். ஏதாவதொரு சமயத்தில் நம்முடைய இயல்பும் வெளிப்பட்டுவிடும். அதனால் யாரையும் பின்பற்றமாட்டேன்” என தெரிவித்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

தொடங்கியது ஸ்டாலினின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு: கோவை கோனியம்மன் தேரோட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *