2025ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்த கிரிக்கெட் திருவிழா, 8 அணிகள் கொண்ட தொடராக நடைபெறவுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில், போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் பாகிஸ்தான் அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது.
இந்நிலையில், மீதமுள்ள 7 இடங்களுக்கு அணிகள் எந்த முறையில் தேர்வு செய்யப்படவுள்ளது என்பது குறித்து, சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்போது நடைபெற்றுவரும் 2023 உலகக்கோப்பை தொடரில், புள்ளிப் பட்டியலில் முதல் 7 இடங்களை பிடிக்கும் நாடுகள் நேரடியாக 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறவுள்ளது.
இதன் அடிப்படையில், தற்போது 2023 ஒருநாள் உலககோப்பை தொடரில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ள இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்காக தங்களது வாய்ப்புகளை உறுதி செய்துவிட்டன.
இந்நிலையில், நெதர்லாந்து அணிக்கு எதிரான நேற்றைய லீக் உலகக்கோப்பை போட்டியில், ரஹ்மத் ஷா (52 ரன்கள்), ஹஸ்மதுல்லா ஷஹிடி (56 ரன்கள்) அஸ்மதுல்லா ஓமர்சாய் (31 ரன்கள்) மற்றும் முகமது நபி (3 விக்கெட்கள்) ஆகியோரின் அதிரடியால், 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றுள்ளது.
இதனால் தற்போது 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ள ஆப்கான் அணி, 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் தனது இடத்தை உறுதி செய்துள்ளது.
இதன்மூலம் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 6 அணிகள், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பதற்கான தங்களது இடத்தை உறுதி செய்துள்ளன.
இந்நிலையில், மீதமுள்ள 2 இடங்களுக்காக, இலங்கை, நெதர்லாந்து, இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய 4 அணிகள் அடுத்தடுத்த போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஐசிசியின் இந்த புதிய அறிவிப்பு மூலம், ஏற்கனவே மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து உள்ளிட்ட முக்கிய அணிகள், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பதற்கான தங்களுக்கான வாய்ப்பை இழந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
கொட்டும் மழையில் ‘ஹெல்த் வாக்’: தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைத்த உதயநிதி
நாங்க தோக்கணும்னு வேண்டிக்கங்க… இல்லேன்னா மொத்தமா வெளில அனுப்பிருவோம்!
வேகம் குறைவாக வாகனம் தயாரிக்க வேண்டும் அதுதான் சரியான தீர்வு . அரசாங்கும் சட்டமும் காசு