”இந்த பலம் போதுமா?”: ஆஸ்திரேலிய வீரரின் ஆணவத்திற்கு… தக்க பதிலடி கொடுத்த கேப்டன்

Published On:

| By Manjula

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை, வெஸ்ட் இண்டீஸ் அணி பதிவு செய்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வென்றது. இதையடுத்து நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று (ஜனவரி 28) திரில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. அதோடு 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை, வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் போட்டிக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் க்ரைக் பிராத்வெயிட் அளித்த பேட்டியில்,”எங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரோட்னி ஹாக் கூறினார்.

அதுவே எங்களுக்கு உத்வேகமாக இருந்தது. நாங்கள் பரிதாபகரமானவர்கள் அல்ல என்பதை உலகுக்குக் காட்ட விரும்பினோம். அவரிடம் ஒன்று கேட்க வேண்டும். இந்த பலம் உங்களுக்கு போதுமா?,” என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்றிருந்த 11 வீரர்களில், 7 வீரர்கள் 1௦-க்கும் குறைவான டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கின்றனர்.

அனுபவம் குறைந்த இந்த வீரர்களை வைத்துத்தான் GABBA மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் க்ரைக் பிராத்வெயிட் வெற்றிக்கனியை பறித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இட ஒதுக்கீட்டுக்கு சாவுமணி அடிக்கும் யுஜிசி : ராமதாஸ் கண்டனம்!

Video: ”சித்திர பூவே என் செல்லமடி நீ”: பியூட்டிஷியனாக மாறிய சாய் பல்லவி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share