எங்கள் அணியினரை வீழ்த்திய வைரஸ்: பிரான்ஸ் பயிற்சியாளர் போட்ட குண்டு!

விளையாட்டு

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் தொடங்கிய 2022 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றது.

இறுதியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. இந்த ஆட்டத்தில் முதல் 22 நிமிடங்கள் வரை பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணி வீரர்கள் யாரும் கோல் அடிக்கவில்லை.

ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் மெஸ்ஸி முதல் கோலை அடித்தார். இதனைத்தொடர்ந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டத்தை அதிகப்படுத்தியது.

இதற்கு பலனாக ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் டி மரியா தனது அணிக்கான இரண்டாவது கோலை அடித்தார். இதன் மூலம் முதல் பாதியின் முடிவில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்து. அதே நேரம் பிரான்ஸ் அணியால் முதல் 60 நிமிடம் வரை ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

பின்னர், அர்ஜென்டினா அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 80 மற்றும் 81 வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர்கள் கண் அசந்த நேரத்தில் அடுத்தடுத்த கோல்களை அடித்து போட்டியை சமன் செய்தார் பிரான்ஸ் அணி வீரர் எம்பாபே.

இந்நிலையில், 109 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோல் அடிக்க ஆட்டம் 3- 2 என்று பரபரப்பாகியது. பிரான்ஸ் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி எம்பாபே மூன்றாவது கோலை அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு சென்றது.

பெனால்டி ஷூட் அவுட்டில் முதல் கோலை மெஸ்ஸி அடிக்க, பின்னர் பிரான்ஸ் வீரர் எம்பாப்பேவும் கோல் அடித்தார். தொடர்ந்து பிரான்ஸ் அணியின் செளமேனி மூன்றாவது வாய்ப்பில் கோலை தவறவிட, தொடர்ந்து வந்த அர்ஜென்டினா அணியின் பரடெஸ் கோல் அடித்தார். இதனால் 3-1 என்ற நிலை ஏற்பட்டது. தொடர்ந்து பிரான்ஸ் அணியின் கோலோ மவுனி கோல் அடிக்க, பின்னர் வந்த மாண்டியல் 4-வது வாய்ப்பில் கோல் அடித்தார். இதன் மூலம் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா உலகக்கோப்பையை வென்றது.

இந்நிலையில், உலகக்கோப்பையை கொடூரமான முறையில் இழந்துள்ளோம் என்றும் நாங்கள் ஆடிய மோசமான ஆட்டம் தான் எங்களை வீழ்த்திய வைரஸ் எனவும் பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸ் கூறியுள்ளார்.

“அதிக ஆற்றல் கொண்ட அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு எதிராக முதல் 60 நிமிடங்களில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை, ஆனால் நாங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்துதான் ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பினோம். அது எங்களுக்கு இன்னும் வருத்தத்தை அளிக்கிறது.

கடைசி நிமிடத்தில் கூட உலகக் கோப்பையை வெல்ல எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அது நடக்கவில்லை. முதல் ஒரு மணி நேரத்தில் நாங்கள் ஆடிய அந்த மோசமான ஆட்டம் தான் எங்கள் வீரர்களை வீழ்த்திய வைரஸ். நாங்கள் ஏன் நன்றாக விளையாட வில்லை என்பதை விளக்க பல காரணங்கள் உள்ளன. பல முக்கியமான வீரர்கள் குறைந்த எனர்ஜியை தான் கொண்டிருந்தனர். குறைந்த அனுபவமுள்ள இளைய வீரர்களை வைத்து புத்துணர்ச்சியுடன் நாங்கள் கண்ட கனவு ஏனோ துரதிர்ஷ்டவசமாக நனவாகவில்லை.

நாங்கள் பயிற்சி மோற்கொண்ட நாட்கள் அர்ஜென்டினா அணியை விட ஒரு நாள் குறைவு தான் ஆனால் இவை சாக்குகள் அல்ல. எங்கள் அணியினர் இந்த இறுதிப் போட்டியில் உடலளவில் சிறந்த நிலையில் இல்லை. நாங்கள் ஆட்டத்தில் இருக்கிறோம் என்ற எண்ணம் எனக்கு வரவில்லை என்று டிடியர் டெஷாம்ப்ஸ் கூறியுள்ளது அந்த அணியினர் மற்றும் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

இறந்த மகளுக்கு பாடகி சித்ராவின் உருக்கமான பதிவு!

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவு திறப்பு!

+1
0
+1
6
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *