“நாங்க வந்துட்டோம்… நீங்க எப்படி?”: அக்தர்

விளையாட்டு

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாட வேண்டும் என்பது தான் தனது ஆசை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் தெரிவித்துள்ளார்.

நேற்று (நவம்பர் 9) நடைபெற்ற டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி முன்னேறியது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.

இதனால், 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.

இதனால், பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இன்று நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் பாகிஸ்தான் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது.

பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றவுடன் அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்திய அணி வீரர்களே, நாங்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளோம். நாங்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும். மெல்போர்ன் மைதானத்தில் 1992-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் நாங்கள் இங்கிலாந்து அணியை வீழ்த்தினோம்.

அதேபோன்று மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாட வேண்டும் என்பது எனது ஆசை. உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டிக்காகத் தான் காத்திருக்கிறார்கள். பாகிஸ்தான் அணி ரசிகர்களின் வேண்டுதல் தற்போது நிறைவேறி இருக்கிறது. பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்று நான் நினைக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

தொடர்ந்து உயரும் தங்கம் விலை!

‘வாத்தி’க்கு மாறாக ‘டிஎஸ்பி’!

+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *