சொதப்பிய கில்… சீறிய ராகுல், ஜடேஜா : இந்தியா முன்னிலை!

Published On:

| By christopher

India lead against England 1st test

India lead against England 1st test

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்களைக் குவித்து 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று (ஜனவரி 25) தொடங்கியது.

ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் நேற்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

முதல் இன்னிங்க்ஸில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டான அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். எனினும் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழந்து 119 ரன்களை எடுத்திருந்தது.

ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இளம் வீரர் ஜெய்ஸ்வால் அரைசதத்துடன் 76 ரன்களுடனும், சுப்மன் கில் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

India lead against England 1st test

இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூட் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து 80 ரன்களில் வெளியேறினார்.

அவரைத்தொடர்ந்து  டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வரும் சுப்மன் கில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் – ஸ்ரேயாஸ் ஐயர் இணை நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் தனது 50வது டெஸ்ட் அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் 35 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ராகுல் 86 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா – ஸ்ரீகர் பரத் அணியின் ஸ்கோரை உயர்த்தும் வேளையில் இறங்கினர். ஜடேஜா தனது 20வது டெஸ்ட் அரைசதத்தைப் பதிவுசெய்து வழக்கமான முறையில் கொண்டாடினார்.

அதேவேளையில் ஸ்ரீகர் பரத் 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.  தொடர்ந்து களமிறங்கிய அஸ்வினும் ஒரு ரன்னில் ரன் அவுட் ஆனார்.

பின்னர் ஜடேஜாவுடன் அக்ஸர் படேல் ஜோடி சேர்ந்த நிலையில், இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 421 ரன்களைக் குவித்து 175 ரன்களுடன் முன்னிலையில் உள்ளது.

India lead against England 1st test

ஜடேஜா 81 ரன்களுடனும், அக்ஸர் படேல் 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து அணி தரப்பில் இதுவரை டாம் ஹார்ட்லி, ஜோ ரூட் தலா 2 விக்கெட்டுகளையும், ஜேக் லீச், ரெஹான் அஹ்மத் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்ற திமுக அமைச்சர்கள்!

வியக்க வைக்கும் விசிக மாநாடு… யார் பார்த்த வேலை இது?

”இசை சொல்லி கொடுத்ததே அவங்க தான்”… கலங்க வைக்கும் யுவன் வீடியோ!

India lead against England 1st test

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel