ஒருநாள் போட்டி: தீபக் சாஹருக்கு பதில் விளையாடப்போவது யார்?

விளையாட்டு

தென் ஆப்பிரிக்கா அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தீபக் சாஹருக்கு பதில் மாற்று வீரரை பிசிசிஐ இன்று (அக்டோபர் 8) அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வீரர்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

இதில் ஏற்கெனவே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

இதில், கடைசி டி20 போட்டியில் விளையாடிய இந்திய அணியின் பந்துவீச்சாளர் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது.

இதனால் அக்டோபர் 6 ஆம் தேதி லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தீபக் சாஹர் விளையாடவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில், தீபக் சாஹருக்கு பதிலாக அடுத்துவரும் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் வாஷிங்டன் சுந்தர் விளையாடவுள்ளார்.

Washington sundhar replace deepak chahar in ind vs sa ODI

இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தென் ஆப்பிரிக்கா அணியுடனான ஒரு நாள் போட்டியில் தீபக் சாஹருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் விளையாடவுள்ளார்.

தீபக் சாஹருக்கு கடைசி டி20 போட்டியின் போது முதுகில் காயம் ஏற்பட்டது. ஆகையால் லக்னோவில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் அவர் விளையாடவில்லை.

தீபக் சாஹர் பெங்களூருவில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாடமிக்குச் சென்று மருத்துவச் சிகிச்சை பெறுவார். இந்திய அணியின் உலகக்கோப்பைக்கான மாற்றுவீரர் பட்டியலில் தீபக் சாஹர் இருப்பதால், அவர் இந்திய தேசிய அகாடமியில் முழு மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்

ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன்கில், ஸ்ரேயாஸ் அய்யர், ரஜத் படிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், ஷபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், ஆவேஷ்கான், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்” என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை (அக்டோபர் 9) ராஞ்சியிலும் மூன்றாவது ஒரு நாள் போட்டி அக்டோபர் 11 ஆம் தேதி டெல்லியிலும் நடைபெறவுள்ளது.

மோனிஷா

பிசிசிஐ தலைவர் போட்டியில் ரோஜர் பின்னி…? பின்னணி என்ன?

24 மணி நேரத்தில் 133 ரவுடிகள் கைது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *