பாலம் முதல் பால் பாக்கெட் வரை செஸ் தான்: விஸ்வநாதன் ஆனந்த்

விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் மூலம் சென்னை நேப்பியர் பாலம் முதல் பால் பாக்கெட் வரை செஸ் பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறது என ஃபிடே அமைப்பின் துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி தொடங்கி நடைபெற்றுவந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று (ஆகஸ்ட் 9) நிறைவு பெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஃபிடே அமைப்பின் துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் பேசுகையில், “இந்தியாவின் செஸ் வீரராக இங்கு நிற்பதில் பெருமையடைகிறேன். செஸ் ஒலிம்பியாட் போட்டியை மிகவும் சிறப்பாக நடத்தியதற்கு முதல்வருக்கு நன்றி.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்த உதவிய அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றி. சென்னை நேப்பியர் பாலம் முதல் ஆவின் பால் பாக்கெட் வரை அனைத்து இடங்களிலும் செஸ் ஒலிம்பியாட் பிரபலப்படுத்தப்பட்டது. இது மிகச்சிறந்த முயற்சி. தற்போது சென்னையும் செஸ் விளையாட்டும் பிரிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

2000த்தில் நான் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றபோது, இப்போது பங்கேற்றிருக்கும் வீரர்கள் யாரும், அதில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், அவர்கள் இப்போது புதிய நம்பிக்கையை விதைத்துள்ளார்கள்” என்று சொல்லி, “நம்ம சென்னை, நம்ம செஸ்” என உரையை முடித்தார்.


ஜெ.பிரகாஷ்

செஸ் நிறைவு விழா: ஆளப் போறான் தமிழன்… கோட்சூட்டில் மேடைக்கு வந்த ஸ்டாலின்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.