தம்பி சாப்பாட்டுக்கு என்ன செய்யுற? விஸ்வநாதன் ஆனந்த் பகிர்ந்த சுவாரசிய சம்பவம்!

உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வினுடன் கேன்டிட் சாட்டில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அது என்னவென்று பார்ப்போம்…

கேரளாவில் நடந்த ஒரு பாராட்டு விழாவில் பங்கேற்க ரயிலில் விஸ்வநாதன் ஆனந்த் சென்று கொண்டிருந்துள்ளார். அவருடன் அதே கோச்சில் முதியவர் ஒருவரும் பயணித்துள்ளார். அப்போது, இருவரும் உரையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

“தம்பி நீ என்ன வேலை பார்க்கிறாய் என்று பெரியவர் கேட்டுள்ளார். அதற்கு, விஸ்வநாதன் ஆனந்த் செஸ் விளையாடுறேன்” என்று பதில் அளித்துள்ளார்.  “செஸ் விளையாடுறது இருக்கட்டும். சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாய் ?” என்று மீண்டும் முதியவர் கேட்டுள்ளார்.

விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் செஸ் விளையாடுவதாக கூறியுள்ளார். அப்போது, அந்த முதியவர், உங்கள் தந்தை ஏதாவது மிகப் பெரிய நிறுவனம் வைத்துள்ளாரா? என்று அடுத்து கேட்டுள்ளார். இல்லை எனது தந்தை வயதானவர். வீட்டில் ஓய்வெடுக்கிறார் என்று பதில் அளித்துள்ளார்.

தொடர்ந்து, அந்த முதியவர் , தம்பி இந்த காலத்துல வீணா செஸ் விளையாடி வாழ்க்கை பாழாக்கிக் கொள்ளாதே… இந்தியாவில் விளையாட்டுகளுக்கு பெரிய மரியாதை எல்லாம் கிடையாது . நல்ல முறையில் வாழ்க்கையை நடத்த பாரு என்று அறிவுரை கூறியுள்ளார்.

பெரியவரின் அறிவுரையை தான் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்ததாகவும்  இந்தியாவில் செஸ் உள்ளிட்ட விளையாட்டுகள் பற்றிய விழிப்புணர்வு மிக குறைவாகவே உள்ளதாகவும் விஸ்வநாதன்   ஆனந்த் அஸ்வினிடத்தில் குறிப்பிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 வந்தே பாரத் ரயிலுக்கு இவ்வளவு டிமாண்டா? போட்டி போடும் 3 நாடுகள்!

குறைந்த தங்கம் விலை: இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts