சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டார்.
உலகளவில் செஸ் விளையாட்டினை ஒருங்கிணைக்கும் தலைமையிடமாக ஃபிடே (FIDE) எனப்படும் சர்வதேச செஸ் கூட்டமைப்பு உள்ளது. இந்த அமைப்பின் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (ஆகஸ்டு 7) சென்னையில் நடைபெற்றது.
இதில் ஃபிடே வின் தலைவராக அர்காடி வோர்கோவிச் தேர்வு செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து துணைத் தலைவராக இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல செஸ் விளையாட்டு வீரரும், கிராண்ட் மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டார்.
வோர்கோவிச் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் இருவரும் ஒரே அணியில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்குப் போட்டியிட்ட நிலையில் 157 வாக்குகளை கைப்பற்றியது. அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆண்ட்ரி பாரிஷ்போலட்ஸ்க்கு 16 வாக்குகள் மட்டும் கிடைத்துள்ளன.
கிறிஸ்டோபர் ஜெமா
செஸ் ஒலிம்பியாட் : தமிழ்நாட்டை புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்!