IND vs AUS 2nd ODI: மைதானத்தின் ரிப்போர்ட் இதோ!

விளையாட்டு

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஒரு நாள் போட்டியின் இரண்டாவது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நாளை (மார்ச் 19 ) மதியம் 1.30 மணிக்கு துவங்குகிறது.

கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வரும் இந்த மைதானத்தில் இதுவரை 9 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 5 போட்டிகளில் சேசிங் செய்த அணியும் 3 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும் வென்றுள்ளன. 1 போட்டி டையில் முடிந்துள்ளது. இந்த மைதானத்தில் 9 போட்டிகளிலும் விளையாடியுள்ள இந்தியா 6 வெற்றிகளையும் 1 தோல்வியும் 1 டையும் சந்தித்துள்ளது.

இந்த மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (556) மற்றும் அதிக சதங்கள் (3) அடித்த வீரராக விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் ரோகித் சர்மா . வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 159 ரன்கள் எடுத்துள்ளார்.

டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரராக குல்தீப் யாதவ் உள்ளார். அவர் எடுத்துள்ள மொத்த விக்கெட்டுகள் 9 ஆகும்.

சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த பவுலராக 5/18 என்ற முறையில் அமித் மிஸ்ரா இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 387/5 எடுத்ததன் மூலம் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக இந்திய அணி உள்ளது.

இந்தியாவுக்கு எதிராக 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 79 ஆல் அவுட் ஆகியதன் மூலம் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக நியூஸிலாந்து அணி உள்ளது.

வெதர் ரிப்போர்ட்

இந்தியாவின் சமீபத்திய போட்டிகளில் மழையின் குறிக்கீடு இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போட்டி நடைபெறும் அன்று இந்த மைதானத்தை சுற்றிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது.

பிட்ச் ரிப்போர்ட்

டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் பெரும்பாலும் பேட்டிங்க்கு சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக இதுவரை இங்கு நடைபெற்ற 9 ஒருநாள் போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 265 ரன்களாகும்.

மேலும் 6.04 என்ற ரன்ரேட் அடிப்படையில் இந்த மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடித்துள்ளனர்.

இதிலிருந்து ஆரம்பகட்ட சூழ்நிலைகளை புரிந்து கொண்டு விளையாடும் பேட்ஸ்மேன்கள் எளிதாக தங்களது அணிக்கு 300 ரன்கள் வரை குவிக்க அதிக வாய்ப்புள்ளது. அதே சமயம் இந்த மைதானத்தில் ஸ்பின்னர்கள் மிடில் ஓவரில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி விக்கெட்டுகளை எடுக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

IND vs AUS : முதல் ஒரு நாள் போட்டி…வான்கடே மைதானத்தின் ரிப்போர்ட் இதோ!

IPL வரலாற்றில் அதிக ரன்களை குவித்த டாப் 5 வீரர்கள்…விவரம் இதோ!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.