INDvsAusFinal: மைதானத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்… பதற்றமடைந்த கோலி

விளையாட்டு

ICC Worldcup Final: இறுதிப்போட்டியின் நடுவே மைதானத்தில் விளையாடி வரும் விராட்கோலியை பாலஸ்தீன ஆதரவாளர் ஓடிச்சென்று கட்டிபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளை பதைபதைக்க  வைக்கும் அளவிற்கு காஸாவில் கொடூர தாக்குதலை அரங்கேற்றி வருகிறது இஸ்ரேல். இதுவரை 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் குழந்தைகள் பலியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து பல நாடுகளில் இஸ்ரேல் போரை நிறுத்தக்கோரியும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் பொதுமக்களின் தன்னெழுச்சியான பேரணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது நடந்துவரும் இறுதிப்போட்டிக்கு நடுவே களத்தில் விளையாடி வரும் விராட்கோலியை ‘STOP BOMBING PALESTINE’ மற்றும் ‘FREE PALESTINE’ என்று எழுதப்பட்டிருந்த ஜெர்ஸியுடன் பாலஸ்தீன ஆதரவாளர் ஓடிச்சென்று கட்டிபிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

எனினும் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதாக அந்த ரசிகரை மைதானத்தில் ஓடிச்சென்று உடனடியாக போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வரும் இந்திய அணி,  23 ஓவர் முடிவில் 125 ரன்களுடன் தொடர்ந்து விளையாடி வருகிறது.

விராட்கோலி  45 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 23 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

இறுதிப்போட்டி: அடுத்தடுத்து 3 விக்கெட்… சரியும் இந்திய அணி… சீறும் ஆஸ்திரேலியா!

WorldCupFinal2023: கபில்தேவ், தோனிக்கும் உலகக்கோப்பையில இதான் நடந்துச்சு!

நாடாளுமன்ற தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டி? – துரை வைகோ விளக்கம்!

 

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *