ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் கடந்த 5ஆம் தேதி தொடங்கிய நிலையில், இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இன்று(அக்டோபர் 8) விளையாடி வருகிறது.
ரசிகர்கள் நிரம்பி வழியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அப்போது பேசிய கேப்டன் ரோகித் சர்மா, ”பிட்ச் கொஞ்சம் மெதுவாக இருப்பதை போல தெரிகிறது. ஆட்டம் செல்ல செல்ல பந்துவீச்சாளர்களுக்கு அதிக ஒத்துழைப்புக் கிடைக்கக்கூடும்.
இரண்டு பயிற்சி போட்டிகளும் மழையால் பாதிக்கப்பட்டாலும், அதற்கு முன்னதாக நாங்கள் இரண்டு பெரிய தொடர்களில் ஆடியிருக்கிறோம். அதனால் பிரச்சனையில்லை.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய அணியின் ஓப்பனர் சுப்மன் கில்லுக்காக இன்று காலை வரை அவருக்காக காத்திருந்தோம். ஆனால் அவரது உடல்நிலை முழுதாக சரியாகவில்லை. அதனால் அவருக்குப் பதில் இஷான் கிஷன் என்னுடன் ஓப்பனிங் இறங்குவார்” என்று ரோகித் சர்மா தெரிவித்தார்.
இதற்கிடையே பிளேயிங் லெவனின் தமிழக வீரர் அஷ்வின் இடம்பிடித்துள்ள நிலையில் இந்திய அணி மூன்று ஸ்பின்னர்களுடன் இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியாவின் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷல் தொடக்க வீரராக களமிறங்கிய நிலையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா முதல் ஓவரை வீசினார்.
King Kohli takes a stunner…!!!! One of the best fielder ever. 🔥🔥🔥
FLYING KOHLI 👑 #IndvsAus2023 #INDvsAUS #ViratKohli𓃵 #RohitSharma𓃵 https://t.co/ZoiZNgRTwn
— TN 72 (@mentalans) October 8, 2023
அந்த ஓவரில் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில், பும்ரா வீசிய 3வது ஓவரில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி வெளியேறினார் மிட்செல் மார்ஷ்.
இதன்மூலம் ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனை விராட்கோலி (15 முறை*) பெற்றுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் 14 கேட்ச்களுடன் அணில் கும்பிளே 2வது இடத்தில் உள்ளார்.
முதல் 5 ஓவர் முடிவில் 1 விக்கெட்டுக்கு 16 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.
ஆடும் லெவன் அணி வீரர்கள் விவரம்!
இந்தியா (பிளேயிங் லெவன்): ரோஹித் ஷர்மா(c), இஷான் கிஷன்(w), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
ஆஸ்திரேலியா (பிளேயிங் லெவன்): டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி(w), கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ்(c), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்