INDvsAUS: ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 5வது லீக் போட்டியில் இன்று (அக்டோபர் 8) தங்களது தொடக்க ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன.
சென்னை சேப்பாக்கத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 199 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3, பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 200 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. ஆனால் மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே இஷான் கிஷன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து ஹசில்வுட் வீசிய 2வது ஓவரிலேயே ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரும் டக் அவுட்டாகி பேரதிர்ச்சி கொடுத்தனர்.
இதற்கிடையே ஆஸ்திரேலிய பவுலர்கள் வீசிய வைடு மற்றும் லெக் பைஸ் உதவியால் 2 ரன்கள் கிடைத்தது. இதனால் இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையை எட்டியது. முதல்பாதியில் மிரட்டிய இந்தியா… இரண்டாவது பாதியில் இப்படி மிரண்டு நின்றதை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மூச்சு பேச்சின்றி பீதியில் பார்த்துக் கொண்டிருந்தனர்.
எனினும் தொடர்ந்து களமிறங்கிய விராட்கோலியும், கே.எல்.ராகுலும் ஆட்டத்தின் தன்மையை உணர்ந்து பொறுமையாக விளையாடினர்.
தற்போது அரைசதத்தை நெருங்கியுள்ள இருவரும் 4வது விக்கெட்டுக்கு 100 ரன்களை குவித்து உறுதியுடன் விளையாடி வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
World cup 2023: 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள்… இந்தியாவை மீட்ட கோலி, கே.எல்…
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு… வெள்ள அபாய எச்சரிக்கை!