ஆஸ்திரேலியா இந்தியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்த மாதம் நடைபெற உள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் மூலம், அடுத்தாண்டு நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் அணிகள் முன்னேற்றம் அடைய வாய்ப்பு கிடைக்கும்.
கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றாலும், பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியாவே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா , விராட் கோலி பார்ம் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விமர்சித்திருந்தார். இதற்கு, இந்திய பயிற்சியாளர் கம்பிர் ஆஸ்திரேலியருக்கு இந்திய கிரிக்கெட்டில் என்ன வேலை? என்று பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில், அடிடெய்டில் இருந்து வெளியாகும் தி அட்வெர்டைசர் என்ற பத்திரிகை விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் வயதுடன் போராடுவதாக குறிப்பிட்டு இந்தி மற்றும் பஞ்சாப்பில் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.
அதே போல, ஜெய்ஸ்வால் குறித்து பஞ்சாபியில் நவம் ராஜா என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது புதிய ராஜா என்று குறிப்பிட்டுள்ளது. அதே போல, ரிஷப் பண்ட் குறித்தும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது பாகிஸ்தான் அணி அங்கு டி20 போட்டியில் விளையாடி வருகிறது. பாகிஸ்தான் அணி அங்கே இருக்கும் போதே, இந்திய அணி வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆஸ்திரேலிய மீடியாக்கள் செய்தி வெளியிட்டதும் பாகிஸ்தான் பயிற்சியாளர் கில்லஸ்பியை கடுப்பேற்றியுள்ளது.
இதனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பார்டர் – கவாஸ்கர் போட்டி தொடருக்கே முக்கியத்துவம் கொடுப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
மிஸ் யூ டீஸர்… மீண்டும் ரொமான்ஸ் மோடுக்கு திரும்பிய சித்தார்த்
இப்படி செய்தால், சாம்பியன்ஸ் லீக்கில் இருந்து வெளியேற பாகிஸ்தான் திட்டம்?