டி20 உலக கோப்பை வெற்றி குறித்து இந்திய வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது ஆசியாவிலேயே அதிக லைக்குகள் பெற்ற பதிவு என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பது பழமொழி, விராட்கோலியின் இன்ஸ்டா பதிவும் சாதனை படைக்கும் என்பது புதுமொழி… ஆம். உண்மை தான்.
17 ஆண்டுகளுக்கு பின்னர் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது நாட்டில் உள்ள அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொடர் முடிந்து 10 நாட்கள் ஆன நிலையிலும் அதுகுறித்த பேச்சு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் இந்திய அணியின் மூத்த வீரரான விராட் கோலியின் இன்ஸ்டா பதிவு தற்போது உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
அவர், இந்திய அணி வென்ற உலகக்கோப்பையுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, அதனை, “இதை விட சிறந்த நாளைக் கனவு கண்டிருக்க முடியாது. கடவுள் பெரியவர், நன்றியுடன் தலை வணங்குகிறேன். இறுதியாக கோப்பையை வென்றுவிட்டோம்” என்று தெரிவித்திருந்தார்.
அந்த பதிவு சமூகவலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. இந்த நிலையில் தற்போது வரை அந்த பதிவு 21.16 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது. இதன் மூலம் ஆசியாவிலேயே அதிக லைக்குகளை பெற்ற இன்ஸ்டா பதிவாக மாறி சாதனை படைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வெறும் 185 ரூபாய் கட்டணத்தில் ஒரு வருட படிப்பு… கப்பலில் வேலைவாய்ப்பு!
’ஆம்ஸ்ட்ராங் படுகொலை… வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?’ : திமுக அரசை விளாசிய பா.ரஞ்சித்