2027-ம் ஆண்டு கிரிக்கெட் உலகின் உச்சத்தில் விராட் இருப்பார் என ஜாதகத்தில் கணிக்கப்பட்டு இருக்கிறது.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த 2023 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெறவில்லை. இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி மிகுந்த வேதனையில் இருக்கிறார். விராட் கோலியின் உழைப்பு இப்படி வீணாகி விட்டதே என ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களது வருத்தங்களை பகிர்ந்து வருகின்றனர்.
Virat Kohli's Astrology 😍 pic.twitter.com/mwW24EbYKV
— Manjari (@mazhil11) November 24, 2023
இந்த நிலையில் 2016-ம் ஆண்டு ஜோதிடர் ஒருவரால் கணிக்கப்பட்ட விராட்டின் ஜாதகம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் விராட் திருமணம் உட்பட பல்வேறு விஷயங்கள் சொல்லப்பட்டு இருந்தாலும் கூட உலகக்கோப்பைக்கு சாதகமாக 2027-ம் ஆண்டு அவரது கிரிக்கெட் கேரியர் நன்றாக இருக்கும் என கணிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் 2024-க்குள் இரண்டாவது குழந்தைக்கு தந்தை ஆவார் என்றும் 2028 மார்ச் போல ஓய்வு பெறுவார் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் என் தலைவன் கண்டிப்பா இன்னொரு உலகக்கோப்பையை இந்தியாவுக்கு வாங்கி தருவான் என, விராட்டுக்கு சப்போர்ட் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
பாலியல் தொல்லை… சீனு ராமசாமி மறுப்பு: மனிஷா யாதவ் பதிலடி!
திமுக மாசெக்கள் கூட்டத்தில் உதயநிதி: காரணம் என்ன?