விராட் – ஷாருக் ரசிகர்கள் இணையத்தில் மோதல்!

விளையாட்டு

பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கான் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ரசிகர்களுக்கிடையே ட்விட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

ரசிகர்கள் மோதல் சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்கள் மற்ற ரசிகர்களை அவதூறாக பேசுவதும் மீம்ஸ் போடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்தநிலையில் பாலிவுட் பாஷா, கிங் கான் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ஷாருக்கான் ரசிகர்களுக்கும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் கிங் கோலி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விராட் கோலி ரசிகர்களுக்குமிடையே ட்விட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

மார்ச் 28-ஆம் தேதி Slog Sweep 189 என்ற ட்விட்டர் பயனர் தனது ட்விட்டர் பக்கத்தில் உலக அளவில் புகழ்பெற்ற பிரபலம் யார் என்று கருத்துக்கணிப்பு நடத்தினார். இந்த கேள்வியில் ஷாருக்கான், விராட் கோலி என்று இரண்டு ஆப்சன்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது.

69 ஆயிரம் பேர் வாக்களித்த இந்த கருத்துக்கணிப்பில் ஷாருக் கானுக்கு 45.6 சதவிகிதம் பேரும், விராட் கோலிக்கு 54.4 சதவிகிதம் பேரும் வாக்களித்திருந்தனர்.

இதனை ஏற்க மறுக்காத ஷாருக் ரசிகர்கள் அவருக்கு தான் அதிக ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்று ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

விராட் கோலி ஷாருக்கானை விட சிறந்தவர் என்று அவர் சதம் அடித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.

இந்தநிலையில் , பதான் படத்தின் Jhoome jo pathan பாடலுக்கு விராட் கோலி மற்றும் ரவிந்திர ஜடேஜா நடனம் ஆடியதை ஷாருக்கான் பாராட்டிய வீடியோவை சிலர் பகிர்ந்து, இருவரும் இந்தியாவிற்கு உலக அளவில் பெருமை தேடி தந்தவர்கள். ரசிகர்கள் சண்டையிட வேண்டாம் என்று தெரிவித்து வருகின்றனர்.

செல்வம்

வைக்கம் நூற்றாண்டு விழா: முக்கிய அறிவிப்புகள்!

”பத்துதல”: ட்விட்டர் விமர்சனம் இதோ!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *