விராட் கோலி சதம் அடிப்பாரா?நம்பிக்கையுடன் இலங்கை வீரர்

விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சதம் அடித்து 1000 நாட்களுக்கு மேல் ஆகிறது.

கடைசியாக அவர் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து இருந்தார்.

அதன்பின்பு அவர் சதம் அடிக்கவில்லை. இது அவருடைய ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த ஆசிய கோப்பை ஆட்டத்திலாவது விராட் கோலி சதம் அடிப்பாரா என்று கேள்வி அவர் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.

இந்நிலையில் , ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Virat Kohli score a century

இந்த போட்டியில் இந்திய அணி ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.

சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய விராட் கோலி 34 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில் இந்திய அணி தங்கள் 2-வது லீக் போட்டியில் ஹாங்காங் அணியை இன்று (ஆகஸ்ட் 31 )எதிர்கொள்கிறது

இந்த போட்டியில் விராட் கோலி தனது 71-வது சர்வதேச சதத்தை அடிப்பார் என இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்சனா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய மஹீஸ் தீக்சனா, ” இந்தியாவுக்கு எதிராக ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட விரும்புகிறேன்.

அந்த போட்டியில் விராட் கோலியை அவுட்டாக்க விரும்புகிறேன். அவர் மிகவும் புத்திசாலித்தனமான வீரர்.

எதிர்வரும் ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் அவர் தனது 71வது சதத்தை அடிப்பார் என நான் நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

விராட் கோலிக்கு இந்த நிலைமையா? சோகத்தில் ரசிகர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.