நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் மூவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா நெதர்லாந்து அணிகள் இன்று (அக்டோபர் 27) சூப்பர் 12 சுற்றில் மோதி வருகின்றன.
மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்ததை அடுத்து சிட்னி மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கே.எல். ராகுல் சொதப்பல்!
அதன்படி டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதல் 2 ஓவர்களில் வழக்கம்போல் தடுமாறிய ராகுல், 3வது ஓவரில் வான் மீக்ரன் பந்துவீச்சில் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதனைதொடர்ந்து ரோகித்துடன், விராட் கோலி ஜோடி சேர்ந்தார். மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததை தொடர்ந்து இருவரும் மெதுவாகவே ரன் சேர்த்தனர்.
இதனால் இந்திய அணி 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் மட்டுமே அடித்தது.
இதற்கிடையே 35 பந்துகளில் அரை சதம் அடித்த ரோகித் சர்மா 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர் விராட் கோலியுடன், சூர்யகுமார் யாதவ் இணைந்தார். இருவரும் நெதர்லாந்து அணியின் பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பவுண்டரி சிக்ஸர்களாக பறக்கவிட்டனர்.
நல்ல பார்மில் இருந்து வரும் கோலி பாகிஸ்தானை தொடர்ந்து இந்த போட்டியிலும் அரைசதம் அடித்தார். இதனையடுத்து சூர்யகுமார் யாதவும் அரைசதம் நோக்கி தனது பேட்டை சுழற்றினார்.

கடைசி பந்தில் பறந்த சிக்ஸ்!
கடைசி ஓவரில் அவர் அரைசதம் அடிக்க 8 ரன்கள் இருந்த நிலையில், முதல் இரண்டு பந்துகளில் 3 அடிக்க, ஸ்ட்ரைக் விராட்கோலி பக்கம் சென்றது. எனினும் 5 வது பந்தில் கோலி ஒரு ரன் அடித்தார்.
இதனால் கடைசி பந்தில் மீண்டும் ஸ்டிரைக்கில் வந்த சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடித்து அரைசதம் கடந்தார்.
இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய விராட் கோலி – சூர்ய குமார் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் குவித்தது.
இதனால் 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 179 ரன்கள் குவித்தது.
தனது இன்னிங்ஸை தொடங்கியுள்ள நெதர்லாந்து அணி 10 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் குவித்து தொடர்ந்து ஆடி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
லோகேஷுடன் தீபாவளி கொண்டாடிய கமல்
சென்னை சிறுவன் கடத்தல்: சமயோசிதமாக தப்பித்தது எப்படி!