virat kohli rohit sharma

விராட், ரோஹித்தின் டி20 எதிர்காலம் இதுதான்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி2௦ தொடருக்காக, இந்திய தேர்வுக்குழு முக்கிய முடிவினை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த 2022-ம் ஆண்டிற்கு பிறகு இந்திய டி2௦ அணியில் முக்கிய வீரர்களான ரோஹித், விராட் இருவரும் இடம் பெறவில்லை.

இதனால் அவர்கள் இருவரின் டி2௦ கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக, தொடர்ந்து கிரிக்கெட் வட்டாரங்களில் செய்திகள் அடிபட்டு வருகின்றன.

இதுகுறித்து அவர்கள் இருவரும் தான் முடிவு செய்ய வேண்டும் என பிசிசிஐ அறிவித்தது. ஆனால் இருவருமே  இந்த விஷயத்தில் வெளிப்படையாக எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில் டி2௦ உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற ஜூன் மாதம் தொடங்குகிறது என அதிகாரப்பூர்வமாக நேற்று (ஜனவரி 5) ஐசிசி அறிவித்தது.

இதையடுத்து  ஐசிசி போஸ்டரில் ரோஹித் சர்மா இடம் பெற்றார். இதேபோல ஐசிசியின் இந்தியா-பாகிஸ்தான் டி20 ப்ரோமோ வீடியோவில் கோலி இடம் பெற்றார்.

இதனால் விராட், ரோஹித்  இருவரும் உலகக்கோப்பை டி2௦ தொடரில் விளையாடுவது உறுதியாகி இருக்கிறது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி2௦ தொடரிலும் விராட், ரோஹித் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிசிசிஐ இருவரையுமே அணியில் சேர்த்து இருப்பதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை, கேப்டனாக ரோஹித் சர்மா சமன் செய்து சாதனை படைத்துள்ளார்.

இதில் கோலியும் முக்கிய பங்கு வகித்து, இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நடுவானில் உடைந்த கதவு… போயிங் விமானத்தில் அலறிய பயணிகள் : நடந்தது என்ன?

பாலஸ்தீனத்துக்காக ஓர் கையெழுத்திடுங்கள்- பப்ளிஷர்ஸ் ஃபார் பாலஸ்தீன் அமைப்பின் வேண்டுகோள்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts