கடந்த 25 ஆண்டுகளில் மக்களால் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் யார்? என்பதை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. virat kohli most searched in google
கடந்த 1998- ம் ஆண்டு தொடங்கப்பட்ட கூகுள் நிறுவனம் தற்போது வெற்றிகரமாக 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இதையொட்டி இந்த 25 ஆண்டுகளில் அதிகம் தேடப்பட்ட விஷயங்கள், தனி நபர்கள், படங்கள் மற்றும் நிகழ்வுகள் எது? என்பதை கூகுள் நிறுவனம் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறது.
இதில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் என்ற பெருமை இந்திய வீரர் விராட் கோலிக்கு கிடைத்துள்ளது. சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி, ரோஹித் சர்மா என பிற இந்திய வீரர்களை பின்னுக்கு தள்ளி இந்த சாதனையை விராட் படைத்துள்ளார்.
If the last 25 years have taught us anything, the next 25 will change everything. Here’s to the most searched moments of all time. #YearInSearch pic.twitter.com/MdrXC4ILtr
— Google (@Google) December 11, 2023
2008-ம் ஆண்டு கிரிக்கெட் உலகில் காலடி எடுத்து வைத்த விராட், தொடர்ந்து கிரிக்கெட் உலகின் சாதனைகள் அனைத்தையும் மாற்றி எழுதி வருகிறார்.
சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை தொடரில் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்கள் என்ற சச்சினின் உலக சாதனையை முறியடித்து, ஒருநாள் போட்டியில் 50 சதங்கள் என்ற புதிய உலக சாதனையை படைத்தார்.
அதோடு 11 போட்டிகளில் விளையாடி 765 ரன்கள் குவித்து, ஒரே தொடரில் தனி ஒரு வீரர் அடித்த அதிக ரன்கள் என்ற புதிய சாதனையையும் படைத்தார்.
விராட் இதுவரை 111 டெஸ்ட் தொடர்களில் விளையாடி அதில் 8,676 ரன்களையும், 292 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அதில் 13,848 ரன்களையும், 115 டி20 போட்டிகளில் விளையாடி அதில் 4,008 ரன்களையும் குவித்துள்ளார்.
3 பார்மேட்களிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 80 சதங்களை, விராட் கோலி அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
8 ரூபாய்க்கு 2.5GB டேட்டா…. ஜியோவின் அசத்தல் திட்டம்!
“குறி வச்சா இரை விழணும்” ரஜினியின் தலைவர் 170 டைட்டில் இதோ!
கேரள ஆளுநர் மீது தாக்குதல்?: எஸ்.எஃப்.ஐ. அமைப்பினர் 7 பேர் கைது!
virat kohli most searched in google