2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்றது.
இந்த தொடரில், இந்த 2 அணிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இந்த அணிகளில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
இதற்கு முன்னதாக, தனது கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. ஆர்.சி.பி மற்றும் சி.எஸ்.கே என 2 அணிகளுமே, அப்போட்டி வாழ்வா? சாவா? ஆட்டமாக இருந்தது.
அப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 218 ரன்களை சேர்த்தது. இதை தொடர்ந்து 201 ரன்கள் எடுத்தாலே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடலாம் என்ற நிலையில் களமிறங்கிய சிஎஸ்கே, 20 ஓவர்களில் 191 ரன்கள் மட்டுமே சேர்த்து தொடரில் இருந்து வெளியேறியது.
பிளே-ஆஃப்க்கு தகுதிபெற, யஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் பந்தில் சிக்ஸர் அடித்த தோனி, அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறியிருப்பார்.
இந்நிலையில், தோனியின் விக்கெட்டை கைப்பற்றிய அந்த கடைசி ஓவரின் 2வது பந்து குறித்து பேசிய யாஷ், “நான் 2வது பந்தை வீச சென்றபோது, விராட் கோலி என்னிடம் வந்தார். ‘நீ சிறிது நேரம் எடுத்து பந்து வீசலாம்’ என தெரிவித்த விராட் கோலி, தோனிக்கு என்ன பந்து வீச வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். அவர் என்னை ஸ்லோ பந்தை வீச சொன்னார். ‘ஏனென்றால், தோனி களத்தில் இருக்கும்போது அவருக்கு நீ வேகமாக பந்துவீசினால், பந்து எங்கு போய் விழுகிறது என்பதை பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது. அது கண்டிப்பாக சிக்ஸ் தான்’ என்று அவர் தெரிவித்தார்”, எனக் கூறியுள்ளார்.
அதன்பின் தான், தான் வேகமாக பந்துவீசினால், தனது பந்து மீண்டும் கடுமையாக விளாசப்படும் என்பதை உணர்ந்ததாக யஷ் தயாள் தெரிவித்துள்ளார். “பின், நான் ஸ்லோ பந்தை வீசினேன். அது எதிர்பார்த்த பலனை கொடுத்தது”, எனவும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
ஆத்திரத்தில் ‘ஓலா’ ஷோரூமை கொளுத்திய வாடிக்கையாளர்: நடந்தது என்ன?
2024 ஆசியன் சாம்பியன்ஸ் ட்ரோபி: ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்திய அணி!