விராட் கோலிக்கு ஐசிசி விருது!

Published On:

| By Prakash

அக்டோபர் மாத ஐசிசி விருதை இந்திய அணியின் விராட் கோலி பெற்றுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் கிரிக்கெட்டில் சிறந்து விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு, ஐசிசி சார்பில் அந்த மாதத்திற்கான சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த அக்டோபர் மாதத்திற்கான ஐசிசி விருதை இந்திய அணியின் கிங் எனப் போற்றப்படும் விராட் கோலி பெற்றுள்ளார். இவ்விருதை அவர், முதல்முறையாகப் பெற்றுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர், ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராஸா ஆகிய இருவரையும் வீழ்த்தி இந்த விருதை அவர் வென்றுள்ளார்.

மகளிர் பிரிவில் பாகிஸ்தானின் நிடா டர் சிறந்த வீராங்கனையாகத் தேர்வாகியுள்ளார். விராட் கோலி, அக்டோபர் மாதத்தில் மட்டும் டி20 போட்டிகளில் 205 ரன்கள் (சராசரி-205, ஸ்ட்ரைக் ரேட்-150.73) குவித்திருக்கிறார்.

குறிப்பாக தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரிலும் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார்.

அந்த தொடரின் சூப்பர் 12 சுற்றில் முதலாவது லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெறுவதற்கு முக்கியப் பங்கு வகித்தவரே கோலிதான்.

தன்னுடைய பழைய ஆட்டத்தை அந்தப் போட்டியில் விளையாடி, ரசிகர்களைக் குதூகலப்படுத்தியதுடன், இந்தியாவையும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அதற்கு முன்பே, ஆசியக்கோப்பையில் சதமடித்து அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பினார்.

ஆசியக்கோப்பை முதல் தற்போதைய உலகக்கோப்பை வரை, அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோலி, நடப்பு உலகக்கோப்பை தொடரில் 5 இன்னிங்சில் 246 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ.பிரகாஷ்

நான் 360 வீரர் அல்ல: சூர்ய குமார் யாதவ்

அர்ஜுனா விருது: பிரக்ஞானந்தா பெயர் பரிந்துரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share