நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மோதலில் ஈடுபட்ட கம்பீர், விராட் கோலி ஆகிய இருவருக்கும் பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதிய போட்டி லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பெங்களூரு அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.
19.5 ஓவர் முடிவில் 108 ரன்களை மட்டுமே எடுத்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஏப்ரல் 10-ஆம் தேதி பெங்களூரு, லக்னோ அணிகள் மோதிய போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் பெங்களூரு அணியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீழ்த்தியது.
இதனால் லக்னோ அணி ஆலோசகர் கவுதம் கம்பீர் பெங்களூரு அணி வீரர்களை பார்த்து ஏளனம் செய்யும் விதமாக,
தனது விரலை வாயில் வைத்து அமைதியாக இருக்கும்படி சைகை செய்தார்.
இந்தநிலையில் நேற்று நடைபெற்ற போட்டியின் போது குருணால் பாண்டியா அடித்த பந்தை கேட்ச் செய்த விராட் கோலி கவுதம் கம்பீருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக,
தனது விரலை வாயில் வைத்து அமைதியாக இருக்கும்படி சைகை செய்தார்.
ஆட்டம் முடிந்து இரண்டு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கை கொடுத்த போது கோலி, கம்பீர், நவீன் உல் ஹக் ஆகிய மூவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அவர்களை டூ பிளஸ்சிஸ், அமித் மிஸ்ரா ஆகியோர் விலக்கினர். மைதானத்தில் வீரர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
ஐபிஎல் விதிகளை மீறியதாக கோலி, கம்பீர் ஆகிய இருவருக்கும் பிசிசிஐ நேற்றைய ஐபிஎல் போட்டியில் 100 சதவிகிதம் அபராதமும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக்கிற்கு 50 சதவிகிதம் அபராதமும் விதித்துள்ளது.
செல்வம்
குடிப்பழக்கம்: 300 போலீசாரை வீட்டுக்கு அனுப்பிய அஸ்ஸாம் முதல்வர்!
ஆரிஃப் உடன் சேர போராடும் சரஸ்… வழக்குப்போட்டு பிரித்த போலீஸ்: நடந்தது என்ன?
டிஜிட்டல் திண்ணை: அமைச்சரவை மாற்றம்… உள்ளே, வெளியே யார் யார்?
தயாரிப்பாளர் சங்க தேர்தல்: வெற்றி பெற்றவர்கள் யார் யார்?-முழு விவரம்!