இரவு 1 மணிக்கு அணியில் இருந்து கோலி தூக்கியடிப்பு… லஞ்சம் கேட்ட செலக்டர்கள்!

Published On:

| By Kumaresan M

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி மீண்டும் டெல்லி அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடி வருகிறார். virat kohli fathers integrity

டெல்லி அணிக்காக கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டு சேலஞ்சர் கோப்பையில் விராட் கோலி விளையாடியிருந்தார். மீண்டும் கோலியின் வருகை டெல்லி ரசிகர்களிடத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலி விளையாடுவதால் மைதானத்திலும் கூட்டம் அலை மோதுகிறது. இன்று கூட 3 ரசிகர்கள் மைதானத்துக்குள் நுழைந்து கோலியிடம் கை கொடுக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இந்த நிலையில், தனக்கு 14 வயதில் நடந்த மோசமான அனுபவம் ஒன்றை கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்குடன் விராட் கோலி பகிர்ந்து கொண்டார். virat kohli father’s integrity

பேட்டியில் கோலி கூறியிருப்பதாவது, “நான் அண்டர்-14 டெல்லி அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தேன். சில காரணங்களுக்காக நள்ளிரவு ஒரு மணிக்கு என்னை அணியிலிருந்து நீக்கினார்கள். லஞ்சம் காரணமாக என்னை நீக்கி விட்டு வேறு ஒருவர் அந்த இடத்துக்கு தேர்வு செய்யப்பட்டார்

அப்போது, எனது தந்தையிடம், பணம் கொடுத்தால், இரண்டு போட்டிகளுக்குப் பிறகு என்னை அணியில் சேர்க்கலாம் என்றும் ஐடியா சொன்னார்கள் . ஆனால், எனது தந்தை , “அவனை விளையாட வைக்க நான் ஒரு பைசா கூட கொடுக்க மாட்டேன். திறமையால் விளையாட முடிந்தால், விளையாடட்டும். இல்லையென்றால் அவனுக்கு விதிக்கப்பட்டது நடக்கட்டும் என்று உறுதியாக கூறி விட்டார்” என்று தெரிவித்துள்ளார். virat kohli father’s integrity

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share