விராட் கோலி தனது 71-வது சர்வதேச சதத்தை அடிக்கும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சபதம் எடுத்த அவரது ரசிகர் ஒருவர், கோலி தனது 74-வது சதத்தை அடித்த அதே நாளில், திருமணம் செய்துள்ளார்.
சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கோலி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மூன்று போட்டிகளில் விளையாடிய கோலி, இரண்டு சதங்களுடன் 283 ரன்கள் எடுத்தார்.
மூன்றாவது ஒரு நாள் போட்டியில் 166 ரன்கள் எடுத்து தனது 74-வது சர்வதேச சதத்தை பதிவு செய்தார்.
விராட் கோலியின் ஆட்டத்தால் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விராட் கோலி தனது 74-வது சர்வதேச சதத்தை அடித்த அதே நாளில் அமன் அகர்வால் என்ற அவரது ரசிகர் ஒருவர் திருமணம் செய்து கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“நான் விராட் கோலியிடம் 71-வது சதத்தை கேட்டேன். ஆனால் எனது சிறப்பு நாளில் அவர் 74-வது சதத்தை அடித்தார்”, என்று ஷெர்வானி அணிந்திருக்கும் படத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும், இவர் கிரிக்கெட் மைதானத்தில் விராட் தனது 71-வது சர்வதேச சதத்தை அடிக்கும் வரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
விராட் கோலி ரசிகரின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செல்வம்