2019-க்குப்பின் சதமடிக்க முடியாமல் ஃபார்மை இழந்து தடுமாறிய கோலியை இந்திய முன்னள் கிரிக்கெட் வீரர்கள் பலர் விமர்சனம் செய்த வந்தனர். அந்த நேரம் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் விராட் கோலிக்கு ஆதராவக பேசி வந்தார்.
அதேபோல், 2022 ஆசிய கோப்பைக்கு முன்பாக நடைபெற்ற இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மோசமாக செயல்பட்ட விராட் கோலி கடும் விமர்சனங்களை சந்தித்த போது “இதுவும் கடந்து போகும். தன்னம்பிக்கையுடன் இருங்கள்” என்று ட்வீட் போட்டு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஆதரவு தெரிவித்திருந்தார்.
அதற்கு நன்றி தெரிவித்து ’’நீங்களும் தொடர்ந்து ஜொலிக்க வேண்டும்’’ என்று அவருக்கு பதிலளித்தர் விராட் கோலி.
இந்நிலையில், அந்த சம்பவம் பற்றி பகிர்ந்துள்ள பாபர் அசாம் அனைவருக்குமே மோசமான தருணங்கள் வருவது சகஜம் தான் என்றும்,
அது போன்ற தருணங்களில் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தால் மட்டுமே அவர்களால் அதிலிருந்து மீண்டு வர முடியும் என்ற எண்ணத்துடன் அந்த ட்வீட் போட்டதாக கூறியுள்ளார்.
இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசிய அவர் “ஒரு விளையாட்டு வீரராக யார் வேண்டுமானாலும் அது போன்ற மோசமான தருணங்களை சந்திக்க நேரிடலாம்.
அந்த சமயத்தில் ஒருவேளை அதுபோன்ற ட்வீட் போட்டால் அது அவருக்கு தன்னம்பிக்கையும் உதவியையும் ஏற்படுத்தலாம் என்று நான் நினைத்தேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களது மோசமான தருணங்களில் நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.
அத்துடன் கடினமான காலங்களில் தான் மற்றவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
எனவே அந்த சமயத்தில் நான் அவ்வாறு செய்தால் ஒருவேளை அதில் ஏதாவது அவருக்கு சாதகமான வாய்ப்புகள் உருவாகும் என்று நினைத்தேன். அது ஒரு கூடுதல் புள்ளியை ஏற்படுத்தலாம்” என்று கூறினார்.
இதனிடையே, விராட் கோலியை வாழ்த்திய நீங்களும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி முன்னேற வேண்டும் என்று கோலி ரசிகர்கள் பாபர் அசாமுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: டவர் டம்ப் அனாலிசிஸ் மூலம் தேடுதல்!
முத்தக் காட்சியில் ஏன் நடித்தேன் தெரியுமா? விளக்கம் கொடுத்த குட்டி நயன்