பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஒரு புதிய பண்ணை வீட்டை வாங்கியுள்ளனர். அதன் மதிப்பு சுமார் 20 கோடி என்று கூறப்படுகிறது.
சினிமா பிரபலங்கள் , கிரிக்கெட் வீரர்கள் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய வீடுகளை வாங்கி வருகின்றனர்.
அது மட்டும் இல்லாமல் பல்வேறு தொழில்களில் பணத்தை முதலீடு செய்து வருகின்றனர்.குறிப்பாக வீடு மற்றும் நிலம் வாங்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
அண்மையில் கூட இயக்குநர் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி சென்னை போயஸ் காடர்ன் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பிரமாண்ட பங்களாவை வாங்கியுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், விராட்கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினர் மகாராஷ்டிரா மாநிலம் கொங்கன் பகுதியில் உள்ள அழகிய கடற்கரைப் பகுதியான அலிபாக்கில் ஒரு ஆடம்பரமான பண்ணை வீட்டை வாங்கியுள்ளனர்.
ஜிராத் கிராமத்திற்கு அருகே 8 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைவீட்டிற்கு அனுஷ்கா மற்றும் விராட் ரூபாய் 20 கோடி வரை செலவிட்டுள்ளனர்.

அலிபாக் கடற்கரையை ஒட்டிய பகுதியென்பதால் இந்த பகுதியில் வீடு வாங்க வேண்டும் என்பது பாலிவுட் பிரபலங்கள் பலருக்குக் கனவாக உள்ளது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் இங்கு நிலம் வாங்கியுள்ளனர்.

இதே பகுதியில் தான் பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனே பலகோடி ரூபாய் செலவில் அண்மையில் வீடு வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட்கோலி தற்போது துபாயில் நடக்கும் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் விளையாடிவருகிறார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
விராட் கோலி சதம் அடிப்பாரா?நம்பிக்கையுடன் இலங்கை வீரர்