வினோத் காம்ப்ளி உடல்நிலை மோசமாக என்ன காரணம்? உண்மையை சொன்ன நண்பர்!

Published On:

| By Minnambalam Login1

சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்கையில் அவரின் சிறுவயது பயிற்சியாளரான ரமாகாண்ட் அச்ரேக்கர் முக்கிய அங்கமாக இருந்தார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆடிய வினோத் காம்ப்ளி, ரமேஷ் பவார், சஞ்சய் பங்கர் உள்ளிட்ட பலரும் அச்ரேக்கரிடம் பயிற்சி பெற்றவர்கள்தான்.

கடந்த 2019ஆம் ஆண்டு ரமாகாண்ட் அச்ரேக்கர் வயது முதிர்வு காரணமாக இறந்தார். இதையடுத்து, மும்பையில் அவருக்கு நினைவுச் சின்னம் திறக்கப்பட்டது.

இதன் திறப்பு விழாவில் சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி பங்கேற்றனர்.

வினோத் காம்ப்ளி மேடையில் அமர்ந்திருந்ததை பார்த்த சச்சின் டெண்டுல்கர், நேரடியாக அவரிடம் சென்று பேசினார். அப்போது ,சச்சினின் கைகளை பிடித்து காம்ப்ளியும் உற்சாகமாக பேசினார்.

https://twitter.com/i/status/1864024484585549913

இந்த தருணத்தில் வினோத் காம்ப்ளி மேடையில் நிற்க கூட முடியாமல் இருந்தார். அவரின் முகமும் மாறி போய் காணப்பட்டது.

இதற்கு , முன்னதாக ஒரு முறை வினோத் காம்ப்ளி நடக்க முடியாமல் தவிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நடுவரும் அவரின் நெருங்கிய நண்பருமான மார்க்கஸ் கியூட்டோ, மும்பை பாந்திரா பகுதியிலுள்ள வினோத் காம்ப்ளியின் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர், காம்ப்ளியை பல இடங்களில் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.

ஆனால், அவரின் உடலில் பல பிரச்னைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், குணமடைவதில் பிரச்சினை இருப்பதாக மார்க்கஸ் கியூட்டோ கூறியுள்ளார்

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் கூட, வினோத் காம்ப்ளி சிகிச்சைக்கு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுவரை, 14 முறை மறு வாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்துள்ளனர்.

தற்போது, 50 வயதே ஆன நிலையில் வினோத் காம்ப்ளியின் உடல் நிலை எப்படி இப்படி ஆனது என்று யாரும் ஊகிக்க முடியவில்லை. போதைக்கு அடிமையானதால் இப்படி ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து சச்சினும் வினோத்தும் நண்பர்கள். இவர்கள் பள்ளி காலத்தில் ஜோடியாக சேர்ந்து 664 ரன்கள் அடித்திருந்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

அதே போல, அடுத்தடுத்து இருவரும் இந்திய அணியிலும் இடம் பிடித்தனர். சச்சினுக்கு இணையாக வினோத் காம்ப்ளி வருவார் என்று கருதப்பட்ட நிலையில், அவரின் வாழ்க்கை மாறி போனது.

தற்போது சச்சின் வினோத் காம்ப்ளியை சந்தித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-எம்.குமரேசன்

அடேங்கப்பா… பிட்காயின் மதிப்பு இவ்வளவு உயர்ந்திடுச்சா?

சரி கமப நிகழ்ச்சி வழியாக தர்ஷினி கிராமத்துக்கு கிடைத்த பஸ் போக்குவரத்து… எப்படி?