பாரீஸில் நடந்து கொண்டிருக்கும் 2024 ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக 117 வீரர்கள் பங்கேற்றுள்ளார்கள். இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை, மனு பாக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் பதக்கத்தை வென்றது மூலம் வாங்கி தந்தார். Vinesh Phogat
மேலும் கலப்பு பிரிவினருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவிலும் வெண்கல பதக்கத்தை வென்றதன் மூலம், ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வாங்கிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் புரிந்தார். Vinesh Phogat
கலப்பு பிரிவில் மனு பாக்கருடன் வெண்கல பதக்கம் வாங்கிய சரப்ஜோத் சிங் சேர்த்து இந்தியா இதுவரை மொத்தம் 3 பதக்கங்கங்கள் வாங்கியுள்ளது.
இந்நிலையில், மற்றொரு போட்டி பிரிவான, பெண்கள் 50 கிலோ மல்யுத்த போட்டி பிரிவின் இறுதிச் சுற்றுக்கு, இந்தியாவின் வினேஷ் போகத் நேற்று முன்னேறினார்.
இன்று காலை நடக்கவிருந்த இறுதிப் போட்டியில் அவர் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால், தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இது மொத்த இந்தியத் தேசத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி பாரிசில் உள்ள இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷாவை தொடர்பு கொண்டு பேசினார். அவரது அறிவுறுத்தலின் பேரில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்திடம் முறைப்படி மேல்முறையீடு செய்துள்ளார் வ். எனினும் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் உறுதி செய்துள்ளது.
மல்யுத்த போட்டியின் விதிமுறைகள்:
ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பின் விதிமுறைகளின் அத்தியாயம் 3, பிரிவு 11-இன் படி, ஒவ்வொரு போட்டிப் பிரிவிற்கும், இரண்டு நாட்கள் எடை பரிசோதிக்கப்படும்.
காலையில் நடக்கும் இந்த பரிசோதனையில் முதல் நாள் 30 நிமிடங்களுக்கு நடக்கும். இந்த பரிசோதனையுடன் மருத்துவ பரிசோதனையும் சேர்த்து நடத்தப்படும்.
இறுதிப் போட்டியில் பங்கேற்பவர் மட்டும் இரண்டாம் நாள் காலையும் எடை பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். இரண்டாம் நாள் 15 நிமிடங்கள்தான் இந்த பரிசோதனை நடக்கும்.
ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் தனது எடையை குறிப்பிட்ட நேரத்திற்குள் சரிபார்த்துக்கொள்ளலாம்.
எடை பரிசோதனையின் போது, மல்யுத்த வீரர் போட்டிக்குத் தேவையான உடையைத் தவிர வேறு எதையும் அணிந்திருக்கக்கூடாது.
இந்தச் சோதனையின் போது தான் இந்திய வீரர் தனது பிரிவான 50 கிலோவை விட கூடுதலாக 100 கிராம் இருந்ததற்காக, தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உலக அரங்கில் பலபோட்டிகளில் பதங்க்கங்களை வாங்கிய இவரின் எடை பொதுவாக 56 கிலோ இருக்கும். ஆனால் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காகத்தான் தனது எடையை கஷ்டப்பட்டு 50 கிலோவாகக் குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஆம்ஸ்ட்ராங் கொலை: காங்கிரஸ் நிர்வாகி கைது… கட்சியில் இருந்து நீக்கம்!
செந்தில் பாலாஜி மீதான ED வழக்கு… உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!