Ellyse perry broke the car window

Video : சிக்ஸர் அடித்து கார் கண்ணாடியை உடைத்த ஆர்.சி.பி வீராங்கனை!

விளையாட்டு

WPL 2024 : உபி.வாரியஸ் அணிக்கு எதிரான நேற்றைய (மார்ச் 4) போட்டியில் பெங்களூரு அணி வென்ற நிலையில், அந்த அணியைச் சேர்ந்த எல்லிஸ் பெர்ரி அடித்த சிக்ஸரால் கார் கண்ணாடி உடைந்த வீடியோ வைரலாகி வருகிறது. Ellyse perry broke the car window

நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 11-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், உ.பி வாரியர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற யுபி அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஸ்மிருதி மந்தனா 50 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார்.

WPL 2024, RCB vs UPW: Mandhana, Perry's Fifties' & Bowlers' Collective Effort Propel Royal Challengers Bangalore To 23-Run Win Over UP Warriorz

அவருக்கு உறுதுணையாக விளையாடிய எல்லிஸ் பெர்ரியும் சிக்ஸர், பவுண்டரி என விளாசி மைதானத்தில் இருந்த ரசிகர்களை குதுகாலப்படுத்தினார்.

தீப்தி சர்மா வீசிய 19வது ஓவரை எதிர்கொண்ட அவர், லாங் ஆன் திசையில் சிக்ஸருக்கு விளாசினர்.

ரசிகர்களை நோக்கி பறந்த அந்த பந்து, நேராக 80 மீட்டர் தூரத்தில் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்தது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்ந்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய உ.பி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. Ellyse perry broke the car window

இதன் மூலம் 23 ரன்களில் ஆர்.சி.பி தனது 3வது வெற்றியை பெற்றது.

மேலும் நடப்பு சீசனில் நேற்று நடந்த 11 லீக் போட்டி பெங்களூருவில் நடந்த கடைசி போட்டி என்பதால், வெற்றியுடன் முடித்த பெங்களூரு அணி வீராங்கனைகள், ஆர்.சி.பி கொடியுடன் தங்களது சொந்த மைதானத்தில் வலம் வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சிறைச்சாலைகள் தகர்ப்பு; 4,000 கைதிகள் தப்பியோட்டம்!

தமிழக அரசு விருதுகளை அள்ளிய ஜோதிகா – ஜெயம்ரவி திரைப்படங்கள்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *