கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரையில், ரிங்கு சிங், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல், ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங் முதலிய 6 வீரர்களை தங்களுடைய அணியில் தக்கவைத்துள்ளது. கடந்த இறுதிப்போட்டியில் அரைசதமடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்ற வெங்கடேஷ் ஐயர், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கேகேஆர் அணி தன்னை தக்க வைக்காதது குறித்து ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் மனமுடைந்து பேசியுள்ளார். இதுகுறித்து RevSportz நிகழ்ச்சியில் பேசிய அவர், “கேகேஆர் அணியை பொறுத்தவரை, இது ஒரு முழுமையான குடும்பம். இங்கு இருக்கும் 20 அல்லது 25 வீரர்கள் மட்டுமல்ல, நிர்வாகம், ஊழியர்கள் என அனைவரும் ஒரு குடும்பமாகவே பார்க்கிறோம். மிகச்சிறந்த வீரர்களை கேகேஆர். தக்க வைத்துள்ளது.
ஆனாலும், தக்க வைக்கப்பட்டவர்களின் பட்டியலில் எனது பெயர் இல்லாமல் போன போது, எனக்கு கண்ணீர்தான் வந்தது. நான் அவர்களின் தக்கவைப்பு பட்டியலில் இருக்க விரும்புகிறேன். கேகேஆர் எனக்கு பெரிய திருப்புமுனையை கொடுத்துள்ளது, அவர்களுக்காக என்னுடைய எல்லாவற்றையும் கொடுத்துள்ளேன். ஆனாலும், ஏலத்தில் எடுக்கப்படுவேன் என்று எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. நாம் விரும்புகிற அணிக்காக ஆட வேண்டுமென்ற ஆர்வம் எல்லோருக்கும் இருப்பது இயல்புதானே” என்று உருக்கமாக கூறியுள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கேகேஆர் அணிக்காக 3வது வீரராக இறங்கி 370 ரன்களை வெங்கடேஷ் ஐயர் அடித்திருந்தார். சராசரி 46 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 158 ஆகும். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா அணிக்காக வெங்கடேஷ் ஐயர் விளையாடி வந்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
91 ஆண்டுகளில் கண்டிராத தோல்வி… கம்பீரை மாற்றி இவரை கொண்டு வாங்க!
வர்றவன்லாம்… புதுசா கட்சி தொடங்குறவன்லாம்…- விஜய்யை ஏக வசனத்தில் விளாசிய ஸ்டாலின்